தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்த நிலையில், வேங்கைவயல் மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அரசியல் கட்சி தலைவர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான், அண்ணாமலை, டிடிவி தினகரன், கனிமொழி மற்றும் பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் ,சிவகார்த்திகேயன், கார்த்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

தமிழகத்தில் அதிகரித்த வாக்கு சதவீதம்

இந்த நிலையில், தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. காலை 7 மணி முதல் 11 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. எந்த தேர்தலில் இல்லாத அளவிற்கு வாக்குப்பதிவு சதவீதம் இந்த முறை அதிகமாகியுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 82.24 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு 90 சதவீதத்தை தொடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 6 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வரிசை நின்று வாக்களித்தனர். வாக்குபதிவு நிறைவடைந்த பூத்களில் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் இவிஎம் எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. அந்தந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

தேர்தலை புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம மக்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்துள்ளனர். மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் நீதி கிடைக்கவில்லை என அம்மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பட்டியல் சமூகத்தை சேர்ந்த 8 வாக்குகளே பதிவான நிலையில் அது வெளியூர் வாக்குகள் என வேங்கைவயல் மக்கள் தெரிவித்துள்ளனர்.