வீடூர் அணையில் விவசாயப் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி!

3 weeks ago 3
ARTICLE AD

விழுப்புரம்: வீடூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக இன்று தண்ணீர் இன்று திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பால் விழுப்புரம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 3200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

வீடூர் அணையில் நீர் திறப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் வராகநதி மற்றும் தொண்டியாறு ஒன்று சேரும் இடத்தில் வீடூர் நிர்தேக்க திட்டம் அமைக்கும் பணி 1958 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1959 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு தெடர்ந்து பயன்பாட்டில் உள்ளது.

வீடூர் அணையின் மொத்த நீளம் 4511 மீட்டர். உயரம் 32 அம மற்றும் அணையின் கொள்ளளவு 605.00 மி.கன.அடி, வீடூர் அணையின் பிரதான கால்வாயின் நீளம் 17.640 கி.மீ மற்றும் 5 கிளை கால்வாய்கள் மூலம் தமிழ்நாட்டில் 2200 ஏக்கர் நிலமும், புதுவை மாநிலத்தில் 1000 ஏக்கர் நிலமும், ஆக மொத்தம் 3200 ஏக்கர் நிலமும் பாசனவசதி பெறுகிறது.

பாசன ஆயக்கட்டுதாரர்கள் கலந்தாய்வு கூட்டம் 13.11.2025 அன்று நடத்தப்பட்டு நீர் இருப்புக்கு ஏற்றவாறு 19.11.2025 முதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 19.11.2025 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க ஆணையிட்டுள்ளார்கள்.

இதன் மூலம் தமிழக பாசன பகுதியான சிறுவை, வீடூர். பொம்பூர், பொன்னம்பூண்டி, கோரக்கேணி, ஐவேலி, நெமிலி, எறையூர், தொள்ளாமூர், கடகம்பட்டு, கொண்டலாங்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் 2200 ஏக்கரும், புதுச்சேரி பகுதியில் 1000 ஏக்கரும் பாசன வசதி பெற்று விவசாயிகள் பயனடைவார்கள். பாசனத்திற்காக தண்ணீர் 19.11.2025 முதல் 02.04.2026 வரை 135 நாட்களுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும். இன்று 19.11.2025 வீடூர் அணையின் நீர்மட்டம் 30.350அடி ஆகும் அணையின் கொள்ளளவு 475.772 மி.கன.அடி ஆகும்.

அதன்படி தற்போது அணையில் 31 அடி நீர் உள்ள நிலையில்,வீடூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக இன்று முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆரணி எம் பி தரணிவேந்தன் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் பாசன கால்வாய்களில் தண்ணீரை திறந்து வைத்து மலர்களை தூவி நீரை வரவேற்றார். பாசன நீரை சிக்கனமாகவும், துறை அலுவலர்களின் அறிவுரைப்படியும், சிறந்த முறையில் பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெற்றிட எல்லா வகையிலும் ஒத்துழைக்குமாறு பாசன ஆயக்கட்டுதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Read Entire Article