Top Mileage Cars: டாடா பஞ்ச் முதல் எக்ஸ்டர் வரை.. 10 லட்ச பட்ஜெட்டில்... சிறந்த மைலேஜ் தரும் கார்கள்

5 hours ago 1
ARTICLE AD

இந்திய சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்து வருவதால், மக்கள் இப்போது ஸ்டைல் ​​மற்றும் அம்சங்களை விட மைலேஜுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.  அந்த வகையில் 10 லட்சம் பட்ஜெட்டில் நல்ல மைலேஜ் தரும் கார்கள் என்ன உள்ளன என்பதை காணலாம்

மாருதி சுஸுகி ஆல்டோ கே10

குறைந்த பட்ஜெட்டில் முதல் முறையாக கார் வாங்குபவராக இருந்தால், ஆல்டோ K10 ஒரு சிறந்த தேர்வாகும். இதன் விலை ₹3.7 லட்சத்தில் தொடங்கி, லிட்டருக்கு சுமார் 24.8 கிமீ மைலேஜை வழங்குகிறது. ஆல்டோ K10 இன் சிறிய அளவு, குறைந்த பராமரிப்பு மற்றும் சுலபமாக கையாளுதால் ஆகியவை புதியதாக கார் வாங்கி ஓட்டுபவர்களுக்கு நல்ல தேர்வாக உள்ளது. வேலைக்குச் செல்வதற்கோ அல்லது குறுகிய தினசரி நகரப் பயணங்களுக்கோ இது நம்பகமான மற்றும் மலிவு விலையில் கிடைக்கும் கார்.

மாருதி சுஸுகி வேகன் ஆர்

இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் பிரபலமான குடும்ப கார்களில் ஒன்று மாருதி வேகன் ஆர். சுமார் ₹5 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும் இது, ஒரு லிட்டருக்கு 26.1 கிமீ மைலேஜே தருகிறது. இதன் உயரமான இருக்கை நிலை மற்றும் விசாலமான கேபின் அதன் வசதியை அதிகமாக்குகிறட்ய். மாருதி வேகன் ஆர் நகர போக்குவரத்தில் கூட ஒரு வசதியான ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது, இது ஒரு பிரபலமான ஆல்ரவுண்டராக அமைகிறது.

ஹூண்டாய் எக்ஸ்டர்

ஸ்டைல் ​​மற்றும் மைலேஜ் இரண்டையும் தேடுபவர்களுக்கு, ஹூண்டாய் எக்ஸ்டர் ஒரு சிறந்த தேர்வாகும். சுமார் ₹5.7 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும் இது, லிட்டருக்கு 19 கிமீ வரை மைலேஜ் வழங்குகிறது. எக்ஸ்டர் அதன் நவீன SUV தோற்றம், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் அம்சங்கள் நிறைந்த உட்புறம் காரணமாக மில்லினியல்களிடையே பிரபலமான தேர்வாக மாறி வருகிறது. பட்ஜெட்டில் SUV போன்ற தோற்றத்தையும் உணர்வையும் தேடுபவர்களுக்கு இது சரியானது.

டாடா பஞ்ச்

டாடா பஞ்ச் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மைக்ரோ எஸ்யூவிகளில் ஒன்றாகும். இதன் அடிப்படை மாடலின் விலை சுமார் ₹6 லட்சம் மற்றும் லிட்டருக்கு சுமார் 18 கிமீ மைலேஜ் வழங்குகிறது. பஞ்ச் அதன் வலுவான கட்டுமானத் தரம் மற்றும் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டிற்கு பெயர் பெற்றது. இது பிரீமியம் உட்புறம், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் உயரத்தை சரிசெய்யக்கூடிய இருக்கைகளைக் கொண்டுள்ளது. இது சிறிய குடும்பங்களுக்கு பாதுகாப்பான, ஸ்டைலான மற்றும் நம்பகமான எஸ்யூவி ஆகும்.

Read Entire Article