விரைவில் அறிமுகமாகிறது District செயலி - பேடிஎம் டிக்கெட்டிங் பிசினஸை வாங்கிய Zomato!

1 year ago 7
ARTICLE AD

பேடிஎம் நிறுவனத்திடமிருந்து திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கான டிக்கெட் புக்கிங் செய்யும் தொழிலை பிரபல உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான Zomato வாங்க இருக்கிறது.

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான  Zomato, Blinkit என்ற அத்தியாவசிய பொருட்களை டெலிவரி செய்யும் தொழிலையும் கொண்டுள்ளது.இப்போது 'going-out' பிரிவிலும் Zomato தனது தொழிலை விரிவு செய்ய உள்ளது. அதற்கு பேடிஎம் நிறுவனத்திடம் உள்ள டிக்கெட்டிங் தொழிலை ரூ.2,048 கோடி மதிப்பில் வாங்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Zomato, பேடிஎம் இரண்டு நிறுவனமும் ஆக.21-ம் தேதி இரண்டு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

திரைப்பட, இசை, நாடக நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் புக்கிங் உள்ளிட்டவற்றிற்கு பேடிஎம்-ல் வசதி உள்ளது. இப்போது இதை Zomato வாங்க இருப்பதால் புதிதாக District என்ற செயலி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இனி, பேடிஎம் இன்சைடர் என்பதற்கு மாற்றாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

District செயலி இன்னும் சில வாரங்களில் அறிமுகப்படுத்த இருக்கிறது Zomato.இதன் மூலம் Zomato உணவகங்களில் டேபிள் புக் செய்வது, திரைப்படங்களுக்கான டிக் புக்கிங், கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளை காண டிக்கெட் புக்கிங், ஷாப்பிங், இசை நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் புக்கிங் உள்ளிட்டவைகளுக்கு District செயலி பயன்படும்.

பேடிஎம் நிறுவனத்திடம் இருந்து இந்த தொழிலைக் கைப்பற்றுவதால் Zomato-விற்கு அங்கிருந்து சுமார் 280 பணியாளர்கள் மாறிவிடுவார்கள். 95 சதவீதத்திற்கு மேல் திரைப்படங்கள் பார்ப்பதற்கு ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. அப்படியிருக்கையில் உணவு டெலிவரி உடன் Zomato நிறுவனம் தொழில் ரீதியிலான அடுத்த நிலைக்கு செல்கிறது.

இதையடுத்து பேடிஎம் பங்கின் விலை உயர தொடங்கியுள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதன் மூலமாக  Zomato நிறுவனத்தின் ஆர்டர் மதிப்பு ரூ.10,000 கோடி என்ற அளவை 2026ம் நிதியாண்டில் அடையும் என  Zomato நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி  தெரிவித்துள்ளார்.

பேடிஎம் நிறுவனம் அதன் பரிமாற்றங்களுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து முறையான கே ஒய் சி ஆவணங்களை பெறவில்லை என்றும், அதன் பேடிஎம் நிறுவனத்தின் அனைத்து பரிவர்த்தனைகளையும் நிறுத்துமாறு ஆர்பிஐ உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நிறுவனம் பெரும் சிக்கல்களை சந்தித்து வந்தது. இப்போது அதன் ஒரு வகை தொழிலை விற்பனை செய்ய இருப்பதால்  நிதி ரீதியிலான விவகாரங்களில் கவனம் செலுத்தும் என்று தெரிவித்துள்ளர்.

இன்னும் சில வாரங்களில் Zomato புதிய செயலியை அறிமுகம் செய்தாலும் அடுத்த 12 மாதங்களுக்கு டிக்கெட் புக்கிங் பேடிஎம் இன்சைடரில் தொடரும் என்றும் அதன்பிறகு வாடிக்கையாளர்கள் District செயலிக்கு மாறிவிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article