முதல் விமானத்தை கண்டுபிடித்தது ரைட் பிரதர்ஸ் அல்ல. வேத கால ரஷியான பரத்வாஜர் என உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் தெரிவித்த கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது.

பாஜக தலைவர்கள் விசித்திரமான, சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, அடிப்படை ஆதாரமற்ற விஞ்ஞானத்திற்கு எதிரான கருத்துகளை தெரிவிப்பது விமாசனத்திற்கு உள்ளாகி வருகிறது.

"விமானத்தை கண்டுபிடித்தது ரைட் பிரதர்ஸ்"

இந்த நிலையில், விமானம் குறித்தும் கும்பகர்ணன் பற்றியும் உ.பி. ஆளுநர் ஆனந்திபென் படேல் தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், "முதல் விமானத்தை கண்டுபிடித்தவர் வேத கால முனிவரான பரத்வாஜர். ரைட் சகோதரர்கள் அல்ல.

விமானத்தை உருவாக்கி மும்பை கடலுக்கு மேலே ஒரு கிமீ தூரம் வரை பறந்தவர் முனிவர் பரத்வாஜர். ஆனால், அதன் கண்டுபிடிப்புக்கான பெருமை வேறொரு நாட்டிற்கு வழங்கப்பட்டது. இப்போது அது ரைட் சகோதரர்களின் கண்டுபிடிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர் இங்கு வந்து, எங்கள் தொழில்நுட்பங்களையும் யோசனைகளையும் எடுத்துக் சென்றனர். அதை படித்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினர். நமது கண்டுபிடிப்புகளை பற்றி, நாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

ராமாயணத்தில் இருக்கும் புஷ்பக் விமானம் ஒரு மேம்பட்ட கண்டுபிடிப்பு. 5000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டவிட்டது" என்றார். கும்பகர்ணன் குறித்து பேசிய அவர், "கும்பகர்ணன் ஒரு தொழில்நுட்ப வல்லுநர்.

உ.பி. ஆளுநர் பேசியது என்ன?

தொழில்நுட்பம் மற்ற நாடுகளுக்குச் செல்லாமல் இருக்க, தனது ஆய்வகத்தில் ஆறு மாதங்கள் ரகசியமாக இயந்திரங்களைத் தயாரித்து வந்தார். 6 மாதங்களுக்கு வெளியே வரக்கூடாது என கும்பகர்ணனுக்கு ராவணன் தடை விதித்ததிருந்தார்.

இதனால், இயந்திரங்கள் தயாரிக்கும் பணியை ஆய்வகத்தில் ரகசியமாகச் செய்ய வேண்டும் அல்லவா. எனவே, கும்பகர்ணன் ஆறுமாதம் தூங்குகிறாரல். ஆறுமாதம் விழித்திருப்பார் என்று வதந்தி பரப்பப்பட்டது. நூலகங்கள், இந்திய அறிவுப் பாரம்பரியத்தின் புராதன நூல்களால் நிரப்பப்பட்டுள்ளது.

மாணவர்கள் அவற்றைப் படிக்க வேண்டும். இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தைப் பற்றி அனைவரும் அறியும் வகையில் இந்தப் புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்" என்றார்.

ஆளுநரின் இந்த கருத்தை கடுமையாக விமர்சிதுள்ள காங்கிரஸ், "பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிலர் மட்டுமே புரிந்து கொள்ளும் அறிவு பகிர்ந்து கொள்ளப்பட்டது" என தெரிவித்துள்ளது.