<p>நடிகை காஜல் அகர்வால் ஒரு பெரிய விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. இன்னும் சில தகவல்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறுகின்றன. இந்த தகவலை உறுதிபடுத்த ஊடகங்கள் காஜல் அகர்வாலை தொடர்புகொள்ள முயற்சித்த போது அவரது ஃபோன் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் அவருக்காக பிரார்திக்க தொடங்கிவிட்டனர். இப்படியான நிலையில் காஜல் அகர்வால் தரப்பில் இருந்து தான் நலமாக இருப்பதாகவும் தற்போது தான் பிஸியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/entertainment/actor-prithviraj-sukumaran-praises-rajamouli-ssmb29-movie-233278" width="631" height="381" scrolling="no"></iframe></p>