விபத்தால் மாற்றுத்திறனாளியான கூலித்தொழிலாளி - வாழ்வாதாரத்தை காக்க உதவிய தவெகவினர்

10 months ago 7
ARTICLE AD

மயிலாடுதுறையில் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் முதுகுத்தண்டு வடம் முறிந்து பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த கூலி தொழிலாளிக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தொழில் செய்ய பெயிண்டிங் கம்பரசரை மாவட்ட செயலாளர் வழங்கியுள்ளார்.

தமிழக வெற்றி கழகம்

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராக உலா வந்தவர் நடிகர் விஜய். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் (Tamizhaga Vetri kazhagam) என்றும் பெயரையும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தனது கட்சியின் முதல் மாநாட்டையும் வெற்றி காரணமாக நடத்தி, தனது அரசியல் பயணத்தின் அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுத்தார். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கட்சி பொறுப்பாளர்களை நியமனம் செய்து 2026 சட்டமன்ற தேர்தல் நோக்கி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடரும் நலத்திட்ட உதவிகள்

மேலும் கட்சி அறிவிப்பிற்கு முன்னதாகவே விஜயின் விஜய் மக்கள் இயக்கத்தினர் கடந்த சில ஆண்டுகளாக அதுவும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா, புயல், வெள்ளம், மழை போன்ற பேரிடர் காலங்களில் ஏழை மக்களுக்கு தடையின்றி மருத்துவம் கிடைக்கும் நோக்கி இலவச மருத்துவ வாகன சேவைகள், ஊரடங்கு காலத்தில ஆதரவற்ற வர்களுக்கு உணவு, அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த நலத்திட்ட உதவிகள் என ஏராளமான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வந்தனர். தற்போது கட்சி தொடங்கியதை அடுத்து அந்த நலத்திட்ட உதவிகள் மேலும் விரிவடைய தொடங்கியுள்ளது.

Elon Musk Atrocity: வெள்ளை மாளிகை வெயிட்ட அதிர்ச்சி வீடியோ...சிரித்த எலான் மஸ்க்.. இது உங்களுக்கே அடுக்குமா?

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி வடபாதி தெருவில் மாவீரன் என்பவர், மனைவி தமிழரசி மற்றும் மூன்று மகன்கள் உடன் வசித்து வருகிறார். மாவீரன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் முதுகு தண்டு வடம் உடைந்து கடுமையாக பாதிக்கப்பட்டார். நடக்க முடியாத மாற்றுத்திறனாளியாக மாறி வாழ்வாதாரம் இழந்து குடும்பத்தினர் தவித்து வந்தனர்.

HDFC Life Smart Protect Plan: குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டுமா? பலன்களை அள்ளித்தரும் Smart ULIP திட்டம்!

பெயிண்டிங் கம்பர்சர் இயந்திரம்

இதனை அறிந்த தமிழக வெற்றி கழக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் குட்டி கோபி அறிவுறுத்தலின் பேரில் செம்பனார் கோயில் ஒன்றிய நிர்வாகி மணிகண்டன், குன்னம் விக்கி ஏற்பாட்டில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மாவீரன் தொழில் செய்து தனது குடும்பத்திற்கான வாழ்வாதாரதை ஏற்படுத்தும் வண்ணம் பெயிண்டிங் கம்பர்சர் இயந்திரத்தை கொடையாக வழங்கியுள்ளனர். மாவட்ட செயலாளர் குட்டி கோபி நேரடியாக வந்து பெயிண்டிங் கம்ப்ரசரை வழங்கி தொழில் செய்து முன்னேறுமாறு ஊக்கமளித்தார். தங்கள் செலவிலேயே தொழில் செய்ய கடை வைப்பதற்கு முன்பணம் அளித்து உதவுவதாகவும், அப்போது அவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் அறிவரசன், செம்பை ஒன்றிய நிர்வாகி சந்தோஷ், எருமல் நடராஜ், ஹரிஷ் அபி, அப்பு உடன் இருந்தனர்.

Read Entire Article