விஜய்க்கு ஏன் சப்போர்ட்? - கே.சி.வீரமணி சொன்ன ஷாக் காரணங்கள்

3 weeks ago 6
ARTICLE AD

தீய சக்தி திமுகவுடன், கூட்டணி வைக்கலாம் என நெருப்பில் குதிக்க சொல்கிறார் பொதுச்செயலாளர், வேறு வழியின்றி, தன் மக்களுக்கு ஆளும் கட்சியுடன் சேர்ந்து, பணிகள் செய்ய தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தேன் என்று வாணியம்பாடியில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி பேசினார்.

திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் கே.சி.வீரமணி தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு தெரிவித்ததால், அவரை திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அதிமுக மாநில மருத்துவ அணி துணைச்செயலாளராக இருந்த மருத்துவர் பசுபதியை, திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளராக, அதிமுக பொதுச்செயலாளர் அறிவித்தார்.

இந்த நிலையில், அதுகுறித்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று திருப்பத்தூர் அதிமுக  மாவட்ட செயலாளராக இருந்து கே.சி.வீரமணியை பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரது தலைமையில், அதிமுக, ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நெருப்பில் குதிக்க சொல்கிறார்

அதில் பேசிய கே.சி.வீரமணி, ”21 ஆண்டுகாலம் நான் அதிமுகவில் பயணித்து, மாவட்ட செயலாளராக இருந்தேன், பல்வேறு அமைச்சர் பதவி, கட்சி பதவிகளை வகித்தேன்,  தற்போது ஆட்சி மாற்றத்தால், திமுகவுடன் கூட்டணி என நெருப்பில் குதிக்க சொல்கிறார் நம்முடைய பொதுச்செயலாளர், அதனால் மன வருத்தம் ஏற்பட்டது.

கடந்த தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது, 100க்கும் மேற்பட்ட இடங்களில் டெபாசிட் கூட அதிமுக பெறவில்லை, சட்டமன்ற உறுப்பினர் பதவியை வைத்து, வீட்டில் அமர்ந்திருக்க மனம் இல்லாமலும், இவ்வளவு செலவு செய்து, தன் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், ஆளும் கட்சியுடன் சேர்ந்தால் தான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தேன்.

உயிருள்ள வரை நான் அதிமுகதான்

உயிருள்ள வரை நான் அதிமுகதான், என்னுடைய சின்னம், இரட்டை இலை, என்னுடைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். தவெகவிற்கு ஆதரவு அளித்தால், என்னை கட்சி பதவியிலிருந்து நீக்குவார் என எனக்கு தெரியும், தெரிந்தேதான் இந்த முடிவை எடுத்தேன். நான் என்றைக்கும் அதிமுகவினருடன் பயணிப்பேன், மேலும் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளருடன், அதிமுகவின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பயணிக்கவும், தானும், கட்சி பதவியை விட்டு, அதிமுக தொண்டானக மாவட்ட செயலாளருடன், கட்சியை வளர்க்க பயணிப்பேன்” தெரிவித்தார்.

Read Entire Article