மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது முதலமைச்சர் விஜய் தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். மேலும் சினிமாத் துறையைச் சேர்ந்த விஜய் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து கமல் பேசினார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மாநிலத்தின் சட்டம் & ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் விவாதித்த விஜய் அவர்கள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 186 மதுக்கடைகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 276 மதுக்கடைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 255 மதுக்கடைகள் என மொத்தம் 717 கடைகளை மூட ஆணையிட்டார். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் தொடர்ச்சியாக அரசியல் கட்சிகள் மட்டும் மக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் முதலமைச்சரின் இந்த முன்னெடுப்பு பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இதுகுறித்து முன்னதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்

'வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார். மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும். வாழ்த்துகள்.' என அவர் கூறியிருந்தார்

விஜயை நினைத்து பெருமை கொள்கிறேன்

இன்று விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கமல் பேசினார் . அப்போது மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது குறித்து "இந்த உத்தரவு வரவேற்கத் தக்கது. இது குறித்து நீண்ட நாட்களாக பேசிக்கொண்டிருந்தார்கள். தற்போது செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது என்று கூறினார் . சினிமாத் துறையில் இருந்து விஜய் முதலமைச்சராகி இருப்பது குறித்து பத்திரிகையாளரின் கேள்விக்கு " அவரை வெறும் சினிமாக்காரராக நீங்கள் பார்க்கக் கூடாது. அவருக்கு நிறைய கடமைகள் இருக்கின்றன. எங்கள் துறையில் இருந்து ஒருவர் முதலமைச்சராகி இருப்பதில் நான் ரொம்ப பெருமை கொள்கிறேன் " என்று கமல் தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலின் போது திமுகவுக்கு ஆதரவளித்து கமல் பிரச்சாரம் செய்தார். மற்ற கட்சிக்காரர்கள் விஜயை நேரடியாக தாக்கி பிரச்சாரத்தில் பேசியபோதும் கமல் விஜய் குறித்து கடுமையாக பேச மறுத்துவிட்டார். தற்போது தேர்தல் அழுத்தம் நீங்கிய நிலையில் கமல் விஜய்க்கு வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவித்து வருவதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

Only for political compulsions, he was little critical about @TVKVijayHQ . His recent comments brings back the classy @ikamalhaasan which we all admired pic.twitter.com/6P2ajukVgD

— Rajasekar (@sekartweets) May 13, 2026