விஜய் மீது முட்டை வீச திட்டம்போட்ட ரஜினி ரசிகர்கள்..கசிந்த ஆடியோவால் பரபரப்பு

10 months ago 8
ARTICLE AD

விஜய் மீது முட்டை வீச திட்டம்

தென் இந்திய சினிமாவின் இரு பெரும் ஸ்டார்கள் ரஜினி மற்றும் விஜய். இரு தரப்பு ரசிகர்களிடையே பாக்ஸ் ஆபிஸ் , சூப்பர்ஸ்டார் பட்டம் என எதை வைத்தாவது மோதல் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் மீண்டும் ஒரு முறை இரு தரப்பினர் இடையிலும் சமூக வலைதளத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் எக்ஸ் ஸ்பேசஸ் தளத்தில் ரஜினி ரசிகர் என்று சொல்லிக் கொண்ட ஒருவர் விஜய் மீது முட்டை வீச திட்டமிட்டார். தனது அரசியல் பயணத்திற்காக விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது எல்லாரும் மொத்தமாக ஒரே கடையில் குறைவான விலைக்கு முட்டையை கொள்முதல் செய்து வீச இருப்பதாக அவர் பேசினார். இந்த ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியானதைத் தொடர்ந்து விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

இருதரப்பினரும் இரு நடிகர்களையும் வைத்து ஆபாசமாக திட்டியும் மீம்ஸ் பகிர்ந்தும் தாக்கி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் நடந்து வரும் மோதல் சீக்கிரம் முடிவடைவதாக இல்லை.

ரஜினிகாந்த் சார்பாக வெளியான அறிக்கை ?

இப்படியான நிலையில் ரஜினிகாந்தின் டீம் சார்பாக வெளியானதாக கூறி சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்று பரவி வருகிறது . இந்த அறிக்கையில் " சூப்பர்ஸ்டார் ரஜினியின் ரசிகர் என்கிற பெயரில் விஜயைப் பற்றி பேசியது கண்டிக்கத்தக்கது. ஒரு உண்மையான ரஜினி ரசிகர் இந்த மாதிரியான செயலில் ஈடுபடமாட்டார். இந்த தகவல்களை பரப்புவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். இந்த மாதிரியான தகவல்கள் மேலும் பிளவையே ஏற்படுத்தும் .அதே நேரத்தில் அனைத்து ரசிகர்களும் கண்ணியத்தையும் பரஸ்பர மரியாதையையும் கார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Read Entire Article