விஜய் மாவட்டம் தோறும் பேருந்தில் செல்லாமல் தொகுதி வாரியாக செல்ல வேண்டும்- செல்லூர் ராஜூ !

2 months ago 8
ARTICLE AD

உயிர்ப்பலி ஏற்படும் வகையில் எவன் சதி செய்திருந்தாலும் அவன் குடும்பமே விளங்காது - என செல்லூர் ராஜூ ஆதங்கத்துடன் சாபம்.

கேட்ட இடத்தை கொடுக்கவில்லை - செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை மாடக்குளம் கண்மாயில் தரமற்ற முறையில் பணிகள் மெற்கொள்ளப்படுவதாகவும், கரையில் உள்ள மணலை அள்ளி வேலைகளுக்கு பயன்படுத்துவதால் கரை பலம் இழந்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ கண்மாயில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்..,”

என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என விஜய் வீடியோ வெளியிட்டது குறித்த கேள்விக்கு,

விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். விஜய் அரசியலில் புதுமுகம். ஆள் ஆளுக்கு விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகமாகவும் விமர்சித்துவிட்டார்கள். அவர்கள் நிர்வாகிகள் செய்தது. கேட்ட இடத்தை கொடுக்கவில்லை.

தொகுதி வாரியாக செல்ல வேண்டும்

2010-ஆம் ஆண்டு ஜெயலலிதா மதுரைக்கு வந்தபோது லட்சக்கணக்கான மக்கள் வழிநெடுக கூடினார்கள். அப்போது அவரை பார்க்கக்கூடிய கூட்டம் கட்டுக்கோப்பாக இருந்தது. ஆனால் கரூரில் பத்தாயிரம் பேர் கூடும் இடத்தில் வெறும் 27 ஆயிரம் பேர் தான் கூடினார்கள். அங்கு இது போன்ற சம்பவம் நிகழ்ந்தது மனதிற்கு வருத்தத்தை தந்துள்ளது. தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பேருந்தில் மாவட்டம் தோறும் செல்லாமல் தொகுதி வாரியாக செல்ல வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய இடங்களை தேர்வு செய்து திடல் போன்ற இடங்களில் முதல் கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். பெண்களும் குழந்தைகளும் உயிரிழந்தது வயிற்று எரிச்சலை தருகிறது. இந்த நேரத்தில் விஜயை விமர்சனம் செய்வது சரியாக இருக்காது. ஒரு தலைவராக அவர் தன்னுடைய ஆதங்கத்தை வீடியோவில் சொல்லி இருக்கிறார். அதைத்தான் அவர் சொல்ல முடியும்.

செந்தில் பாலாஜி சதி செய்துள்ளதாக குற்றம் சாட்டுகிறார்கள் என்பது குறித்த கேள்விக்கு,

ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். இதுபோன்று உயிர்பலி ஏற்படும் வகையில் எவன் செய்திருந்தாலும் அவன் குடும்பமே விளங்காது என சாபம் அளித்தார். இந்த சம்பவத்திற்கு மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளர் தான் காரணம் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாம்பை கையில் பிடித்து விளையாடக்கூடிய இளைஞர்கள் உள்ள நிலையில் அவர்கள் வீடியோவில் கதறுவதை பார்த்தோம். கரூரில் அதே இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்டபோது கூட்ட நெரிசல் ஏற்படும் என அனுமதி மறுத்து பிறகு அனுமதி கொடுத்தார்கள். அதேபோல தவெகவினர் இடம் கேட்டபோது உயிர்பலி ஏற்படும் எனக்கூறி அந்த இடத்தை கொடுக்க மறுத்து இருக்க வேண்டும். வேறு அகலமான இடத்தை கொடுத்திருக்க வேண்டும். என்ன இருந்தாலும் வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக்கூடாது.

சம்பவம் நடந்த உடன் உடனுக்குடனாக நீதியரசரை நியமித்துள்ளார்கள்

விஜயால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. காலதாமதமாக வந்துள்ளார். விஜய்க்கு அந்த இடத்தை எந்த அடிப்படையில் கொடுத்தார்கள் என தெரியவில்லை. விஜய் கேட்டதால் கொடுத்திருப்பதாக கூறுவது சப்பை கட்டு கட்டும் நோக்கம். சம்பவம் நடந்த உடன் உடனுக்குடனாக நீதியரசரை நியமித்துள்ளார்கள். அது எப்படி நடந்தது. ஒரு பாஸ்ட் ஃபுட்டு போல் ஓய்வு பெற்ற நீதிபதி ஆணையம் அமைக்கப்பட்டு அவர் உடனடியாக ஆய்வு செய்கிறார். மக்களை சந்திக்கிறார். எல்லா தலைவரும் சொல்லுவது தான் மக்களை சந்திப்பது தான் தலைவர்கள் நோக்கம் என பேசினார்.

Read Entire Article