தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க திமுக கூட்டணி தீவிரமாக பணியாற்றி வருகிறது.

திமுக-வை வீழ்த்த அதிமுக கூட்டணி, நாம் தமிழர் ஒரு பக்கம் இருக்க புதிய எதிரியாக தவெக-வும் களத்தில் இறங்கியுள்ளது. இதனால், வரும் தேர்தலில் மக்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை எடுத்து வைக்க திமுக வியூகம் வகுத்துள்ளது. இதற்காக தேர்தல் வாக்குறுதிகள் அறிக்கை குழுவை திமுக அமைத்துள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுநலச் சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்தாலோசிக்க தலைமை கழகத்தில் அமைக்கப்பட்ட குழுவின் விவரம்:

1. கனிமொழி கருணாநிதி ( தலைமை)

2. டி.கே.எஸ். இளங்கோவன்

3. கோவி செழியன்

4. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

5. டிஆர்பி ராஜா

6. எம்எம் அப்துல்லா

7. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

8. எழிலன் நாகநாதன்

9. கார்த்திகேய சிவசேனாபதி

10. தமிழரசி ரவிக்குமார்

11. சந்தானம்

12. சுரேஷ் சம்பந்தம்

ஆகியோரை தேர்தல் வாக்குறுதிகள் தயாரிப்பதற்கான குழுவாக அமைத்துள்ளனர்.