விஜய் பெற்ற வெற்றி தேர்ந்த அரசியல்வாதிகளுக்கு கூட மிகப்பெரிய பாடம்.. தமிழிசை ஓபன் டாக்!

2 weeks ago 3
ARTICLE AD

தவெகவினரை தற்குறி என பலரும் சொல்லி வந்த நிலையில் அவர்கள் தற்போதைய அடையாளமாக மாறி நிற்கிறார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் பேசிய அவரிடம், “அரசியல் தலைவர்கள் விஜய் வருகையை தவறாக கவனித்து விட்டார்களா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறதே?” என கேட்கப்பட்டது.

அதற்கு, “எல்லாரும் விஜயின் உடனுக்குடனான அரசியல் செயல்பாடுகளை மட்டுமே பார்த்தார்கள். ஆனால் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகளை பார்க்கவில்லை. ஒரு இணையதள புரட்சி நடந்திருக்கிறது என்பது உண்மை. அந்த காலத்தில் காங்கிரஸிடமிருந்து திமுக தமிழ்நாட்டைக் கைப்பற்றும்போது வீதி வீதியாக சென்று பரப்புரை கூட்டங்களை போட்டார்கள். அதன்மூலம் மக்களை ஈர்த்தார்கள். இன்றைக்கு அதெல்லாம் தேவையில்லை. உட்கார்ந்த இடத்தில் இருந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டால் மக்கள் ஈர்க்கப்பட்டு விடுகிறார்கள். உட்கார்ந்த இடத்திலேயே தேவையான செய்திகள் கிடைப்பதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் புரட்சி

பொதுக்கூட்டம் என்றால் கிளம்பி செல்ல வேண்டும். அதற்கடுத்து டிவி என்றால் வரவேற்புரைக்கு செல்ல வேண்டும். செல்போனில் இருந்த இடத்தில் இருந்தே பார்க்கலாம். நான் கேள்விப்பட்டவரை தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாவட்டத்திற்கு ஒரு வார் ரூம் செயல்படுகிறது என நினைக்கிறேன். இனிமேல் அப்படித்தான் அணுக வேண்டும். ஏன் இது எங்களுக்கு தெரியவில்லை என கேட்டால் அரசியல் கூட்டம் என்றாலே மைக் போட்டு கத்தி பேசுவோம்.

இந்த முறை அந்த கருத்துகள் இணையத்தில் பரவி பரவி அமைதி புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது தேர்ந்த அரசியல்வாதிகளுக்கு கூட மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது. பாஜக ஏற்கனவே திரிபுரா மாநிலத்தில் சமூக வலைத்தள செயலிகளை பயன்படுத்தினார்கள். ஆனால் இங்கு அதனை கவனிக்க தவறி விட்டார்கள். உளவுத்துறையும் கவனிக்கவில்லை.

டாஸ்மாக் பிரச்னைக்கு முடிவு

முதலில் டாஸ்மாக்கை மூட வேண்டும் என நான் விஜய் பதவியேற்பு விழாவுக்கு சென்று வந்தவுடன் கருத்து தெரிவித்தேன். மறுநாள் என்னைப்போல பெண்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு மூடும் அறிவிப்பை வெளியிட்டார்கள். அதேசமயம் திமுக ஆட்சிக்கு வரும் முன் தனது மனைவியுடன் மு.க.ஸ்டாலின் டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்திய நிலையில் ஆட்சிக்கு வந்தவுடன் மறந்து விட்டார்கள். தவெக ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக் பிரச்னையை கையில் எடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது. டாஸ்மாக் வருவாய்க்கு இணையான பொருளாதார வளத்தை ஏற்படுத்த வேண்டும் என அடிக்கடி சொல்வேன். அதற்கான ஆரோக்கிய நிலையாக தான் பார்க்கிறேம்.

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கியிருக்கிறார்கள். திமுக அதனை 2 ஆண்டுகள் கழித்து தான் போட்டார்கள்.விஜய் ஆட்சிக்கு வந்தவுடன் செய்து விட்டார். தொழில்முனைவோரை அழைத்து பேசினார்கள். விஜய் பற்றி விமர்சனம் வைக்கப்பட்ட நேரத்தில் தலைமைச் செயலகத்தில் நேரம் அதிக செலவிடுவது உண்மையில் ஆரோக்கியமானது தான். கேள்விக்குறியாக இருந்த விஜய் ஆச்சரியக்குறியாக மாறி விட்டார். தற்குறியாக இருந்தவர்கள், தற்போதைய குறியீடாக மாறிவிட்டார்கள்.

அரசியலுக்கு வருவதை சொன்ன விஜய்

விஜயை இதற்கு முன்னால் சந்தித்துள்ளேன். ஆளுநராக இருந்தபோது ஒருமுறை விமானத்தில் சந்தித்தேன். மாஸ்க் அணிந்த அவர் அக்கா நான் விஜய் என தன்னை அறிமுகப்படுத்தினார். எந்த விஜய்ப்பா என நான் கேட்க, மாஸ்கை விலக்கி முகத்தைக் காட்டினார். பின் நீண்ட நேரம் நாங்க பேசினோம். 4 வருடம் முடிவில் அந்த சந்திப்பு நடந்தது.

அப்போது நீங்க அரசியலுக்கு வருவீர்களா என கேட்டதுக்கு மழுப்பாமல் ஆமாம் வருகிறேன் என உறுதியாக சொன்னார். அப்போது பிரதமரை வந்து ஒருமுறை பாருங்களேன் என சொன்னேன். அதற்கு இப்ப இல்ல... நேரம் வரும்போது சந்திப்பேன் என கூறினார். என்னையும் ஆளுநர் ஆனது பற்றியும் கேட்டார்” என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Read Entire Article