தவெக தலைவர் விஜய் முதல் அமைச்சராகப் பதவியேற்க வேண்டும் என்று கோரி, அக்கட்சியின் நிர்வாகி திருநெல்வேலியில் தீக்குளித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அரசியல் களம் பரபரப்பாகக் காணப்படும் நிலையில், தவெகவுக்கு காங்கிரஸ், இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. எனினும் விசிக என்ன செய்யும் என்று இதுவரை தெரியவில்லை.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க வேண்டும் என்று கோரி, அக்கட்சியின் நிர்வாகி திருநெல்வேலியில் தீக்குளித்துள்ளார்.

நடந்தது என்ன?

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே உள்ள செட்டி குளத்தைச் சார்ந்த வேலு மகன் இசக்கியப்பன். இவருக்கு வயது 47, இசக்கியப்பன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பழவூர் காவல் நிலைய சரகம், விஸ்வநாதபுரம் அருகே மகாராஜபுரம் சந்திப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர். மேற்படி நபர் உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட நிலையில், அங்கு அவர் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். 30 சதவீத தீக்காயத்தோடு இசக்கியப்பன் சிகிச்சை பெற்று வருகிறார்.

குடிபோதையில் தற்கொலை முயற்சி

முதற்கட்ட விசாரணையில், மேற்படி நபர் தவெக நிர்வாகி என்ற விவரம் தெரியவந்துள்ளது. குறிப்பாக வள்ளியூர் தவெக தன்னார்வலர் அணியின் துணை பொதுச் செயலாளராக இசக்கியப்பன் பதவி வகித்து வருகிறார். இவர் தவெக தலைவர் விஜயை முதலமைச்சராக்க வேண்டும் என்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விபரம் தெரியவந்துள்ளது. மேலும் மேற்படி நபர் குடிபோதையில் உள்ள விவரமும் தெரிய வந்துள்ளதாக நெல்லை காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறது.