இந்து மதத்தில் கிராம்பு மற்றும் கற்பூரம் ஆகியவற்றை வழிபாட்டில் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

பொதுவாக எந்த மதமாக இருந்தாலும் அவற்றின் வழிபாடு என்பது வித்தியாசமாக இருக்கும். அதில் சில மதங்களில் வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் ஒன்றாக இருக்கும். அந்த வகையில் இந்து மதத்தில் நாம் சமையலறையில் பயன்படுத்தும் பொருட்கள் கூட வழிபாட்டிற்குரியவையாக மாறும். உதாரணமாக மஞ்சள் சொல்லலாம். அதேபோல் கிராம்பும் பூஜை வழிபாட்டில் பயன்படுத்தப்படுகிறது.

கிராம்பு சமையலிலும் மருத்துவத்திலும் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது இறை வழிபாட்டிலும் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சாஸ்திரங்களின்படி, கிராம்பை நாம் சரியாக முறையில் பூஜையில் பயன்படுத்தினால் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் என சொல்லப்படுகிறது. இதன்மூலம் பணம் தொடர்பான பிரச்னைகள், இல்லற வாழ்க்கை, நோய்கள், தொழிலில் தடைகள் போன்றவை சரியாகும் என நம்பப்படுகிறது. இதனை அன்றாட வாழ்வில் சில வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.

<iframe title="Vijaya Prabhakaran on CM Vijay | CM விஜய் பற்றி எல்லைமீறி பேசிய விஜய பிரபாகரன்! பிரேமலதா ரியாக்‌ஷன்" src="https://www.youtube.com/embed/HId4AKL95KA" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு கிண்ணத்தில் சிறிதளவு கற்பூரம் மற்றும் கிராம்பை எரிக்கலாம். இது வீட்டில் லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களைக் கொண்டு வரும் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் செல்வப் பற்றாக்குறை நீங்கி நிதி முன்னேற்றம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

வீட்டில் நாட்பட்ட நோய் இருப்பவர்கள் அல்லது அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுவர்களாக இருந்தால் கிராம்பை எரிப்பதால் உருவாகும் மணம் வீட்டில் இருந்த எதிர்மறை ஆற்றலை நீக்கி நன்மை பயக்கும் என கூறப்படுகிறது. காரணம் நோய் பாதிப்புக்கு உடல் மட்டுமல்ல சில நேரங்களில் நம் சுற்றுப்புறமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதால் மகிழ்ச்சி சீர்குலையும். செவ்வாய்க்கிழமை நாளில் அனுமன் கோவிலுக்குச் சென்று 5 கிராம்புகளையும் கற்பூரத்தையும் சேர்த்து எரிப்பதாலும், வீட்டிலும் இதனை மேற்கொள்வதாலும் வீட்டில் பாசிட்டிவான எனர்ஜி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில நேரங்களில் நாம் செய்யும் வேலைகளில் தொடர்ச்சியாக தடைகள், நஷ்டம், குறிப்பிட்ட நேரத்தில் பணிகள் முடியாமை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அப்படியான பாதிப்பை சந்திப்பவர்கள் தினமும் வீட்டில் கற்பூரமும் கிராம்பும் எரிப்பதால் இந்த பிரச்னை சரியாகும் என நம்பப்படுகிறது.

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில் நிம்மதி நாடி பல வழிகளை ஒவ்வொருவரும் நாம் நாடுகிறோம். அப்படியாக இந்த வழிபாட்டை நாம் மேற்கொண்டால் மனதிலிருந்து கவலை, பயம் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் யாவும் நீங்கி மன திருப்தி, அமைதி மற்றும் நேர்மறையான எண்ணங்கள் நிறைந்திருக்கும் என நம்பப்படுகிறது.

(மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஆன்மிக அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. இதற்கு ஏபிபி நாடு பொறுப்பேற்காது)