வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ் விவகாரம்.. மறைமுகமாக பதவி கேட்ட தாடி பாலாஜி! என்ன செய்ய போகிறார் விஜய்?

10 months ago 7
ARTICLE AD

தமிழக வெற்றிக்கழகத்தில் தனக்கு பதவி கிடைக்காததால் நடிகர் தாடி பாலாஜி வெளியிட்ட ஸ்டேட்டஸ் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அதற்கு தற்போது விளக்கம் கொடுத்துள்ளார் பாலாஜி.

தமிழக வெற்றிக்கழகம்:

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்கிற கட்சியை தொடங்கி, அதன் பின்னார் கட்சி மாநாடு நிர்வாகிகள் நியமனம் என விஜய் தனது கட்சியை 2026 தேர்தலுக்கு பலப்படுத்தும் வகையில் பல பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார்.

நிர்வாகிகள் நியமனம்:

இந்த நிலையில் கட்சியில் புதிய நிர்வாகிகளை தவெக தலைவர் விஜய் சில நாட்களுக்கு நியமித்தார், இதில் கட்சியில் ஆரம்பம் முதலே இருந்தவர் தாடி பாலாஜி, அவருக்கு பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவருக்கு பதவி கிடைக்காமல் சமீபத்தில் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோருக்கு பதவிகள் வழங்கப்பட்டது, ஆனால் பாலாஜிக்கு பதவி  வழங்கப்படவில்லை.

பாலாஜி வைத்த ஸ்டேடஸ்:

இந்த நிலையில் பாலாஜியின் வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ் ஒன்று வைரலாகி வந்தது, அதில் தற்குறி நான் அவளின் நினைவுகளோடு என போடப்பட்டு இருந்தது. அந்த போட்டோவில் புஸ்ஸி ஆனந்த் புதிய நிர்வாகியான ஆதவ் அர்ஜூனாவை வரவேற்பது போன்றும், கீழே இருந்த போட்டோவில் தாடி பாலாஜி விஜயின் புகைப்படத்தை பச்சைக்குத்தும் படமும் இருந்தது.
தனக்கு பதவி கிடைக்காத விரக்தியில் தாடி பாலாஜி இப்படி வைத்ததாக தகவல் பரவின. ஆனால் இது குறித்து பாலாஜி தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் வராமல் இருந்தது.

பாலாஜி விளக்கம்:

இந்த நிலையில் இது குறித்து தாடி பாலாஜி விளக்கம் அளித்துள்ளார், இதனை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில்

"இன்றைக்கு தமிழ் கடவுள் முருகருக்கு உகந்தநாளான தைப்பூசம். இந்த தைப்பூச தினத்தில் அனைவருக்கும் மனமார்ந்த தைப்பூச நல்வாழ்த்துகள். இந்த வீடியோ பதிவு எதற்கு என்று கேட்டால், 2-3 நாளாகவே இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் என்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றிய விஷயத்தை எல்லோரும் பகிர்ந்து வருகின்றனர். யாரோ ஒருவர் எனக்கு அனுப்பியதை நான் எதேச்சையாக எனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்தேன். அது இப்படியொரு விவாதப்பொருளாகும் மாறும் என்று எனக்கு தெரியாது."

இதையும் படிங்க: Chennai Power Shutdown: சென்னையில் நாளை(12.02.2025) மின் தடை ஏற்படும் பகுதிகள் .. இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது.. முழு விவரம்

விஜய் நல்லா இருக்கனும்:

"இன்னொரு விஷயம்.. எனது நண்பரும், தவெகவின் தலைவருமான மரியாதைக்குரிய விஜய் கட்சி தொடங்கும்போது நான் என்ன சொன்னேன் என்றால் அவரது நண்பராக நான் பணியாற்றுகிறேன். அவர் நல்லபடியாக வர வேண்டும். அந்த கட்சி நல்லபடியாக வளர வேண்டும் என்று கூறினேன். பதவியை எதிர்பார்த்தோ, எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்றோ நான் பணி செய்யவில்லை. இன்று தைப்பூச திருநாளில் நான் ஓபனாக சொல்கிறேன். யாருக்கு புரியுதோ இல்லையோ நான் கும்பிடும் கடவுளுக்கு புரியும். எனது நண்பரும், தவெகவின் தலைவருமான விஜய்க்கு புரியும். ஏனென்றால் விஜய் எல்லோருடைய பேச்சையும் கேட்டு எதையும் பண்ணமாட்டார். அவரே ஒரு முடிவு எடுப்பார் அவர் எடுக்கும் அந்த முடிவு சரியாக இருக்கும். அதனால் தான் அவர் இன்று அரசியல் பயணம் செய்கிறார். என்றார்."

பாலாஜிக்கு என்ன கொடுக்க வேண்டும்?

மேலும் பேசிய "பாலாஜி தலைவருக்கு தெரியும். பாலாஜிக்கு என்ன கொடுக்க வேண்டும்? என்ன கொடுத்தால் பாலாஜி இன்னும் பலமாக ஓடுவார் என்று அவருக்கு தெரியும். தைப்பூச நாளில் சொல்கிறேன். கூடிய விரைவில் என்னுடைய நண்பரும். தலைவருமான விஜயிடம் இருந்து ஒரு அழைப்பு வரும். அந்த அழைப்பில் இருந்து என்னுடைய ஓட்டம் வேறுவிதமாக இருக்கும். இப்போதும் சொல்கிறேன் நான் பதவிக்காக பணி செய்யவில்லை. மார்ச் மாதம் தலைவர் சுற்றுப்பயணம் செல்லவுள்ளார்.  அதற்கு உறுதுணையாக இருக்கும் ஆதவ் அர்ஜுனா, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், என்னுடைய தலைவருக்கும் முதல் வாழ்த்துகள்

உங்களின் கட்சியில் தொண்டனாக பயணிப்பதில் எனக்கு சந்தோஷம், தொண்டனாகவே இருந்தாலும் எனக்கு சந்தோஷம் தான். எப்போதுமே எனது தலைவருக்காக பணியாற்றி கொண்டே இருப்பேன் மீண்டும் ஒருமுறை எனது நண்பரும், தவெக தலைவர் விஜய்க்கும் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று அந்த வீடியோவில் தாடி பாலாஜி தெரிவித்தா

Read Entire Article