சீர்காழி பேருந்து நிலையத்தில் வழி தெரியாமல் தடுமாறிய மூதாட்டி ஒருவருக்கு அங்கு பணியில் இருந்த காவலர் உதவி செய்த சம்பவம் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

முதல்நிலை காவலர் அண்ணாமலை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சேர்ந்தவர் முதல் நிலை காவலர் அண்ணாமலை. இவர் சீர்காழியில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சீர்காழி புதிய பேருந்து நிலையம் முன்பு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் காவலர் அண்ணாமலை ஈடுபட்டிருந்தார். அப்போது சீர்காழி அடுத்த திருவெண்காடு பகுதியில் இருந்து சீர்காழி ஆதார் மையத்தில் ஆதார் திருத்தம் செய்ய மூதாட்டி ஒருவர் வந்துள்ளார்.

கோலிவுட்டின் ப்ளாக்பஸ்டரா 2024? வரிசை கட்டி காத்திருக்கும் ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்கள்!

வழி தெரியாமல் தவித்த மூதாட்டி

சீர்காழி புதிய பேருந்து நிலையம் வரை வந்த அவர் வயது மூப்பு காரணமாக திக்கு திசை தெரியாமல், ஆதார் நிலையத்திற்கு எப்படி செல்வது என்று தவித்துக் கொண்டிருந்தார். அதனை பார்த்த காவலர் அண்ணாமலை மூதாட்டியிடம் சென்று, பாட்டியிடம் விவரங்களை கேட்டுள்ளார். அப்போது அந்த மூதாட்டி தனது பெயர் தங்கபாப்பு என்றும், ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்காக திருவெண்காட்டில் இருந்து சீர்காழிக்கு வந்ததாகவும், இங்கிருந்து ஆதார் அட்டை திருத்தம் செய்ய எங்கு செல்ல வேண்டும் என்பது தனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.

CM Stalin: கலைஞர் நாணயத்தில் இந்தி; ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை? ஏன்- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

உதவிய காவலர்

அதனைக் கேட்ட காவலர் அண்ணாமலை அவ்வழியாக சென்ற ஒரு ஆட்டோவினை நிறுத்தி, ஆட்டோ ஓட்டுனர் இடம் போகும் வழியில் காந்தி பூங்காவில் அமைந்துள்ள ஆதார் மையத்தில் மூதாட்டியினை இறக்கிவிட்டு செல்லுமாறு கூறி மூதாட்டியே ஆட்டோவில் ஏற்றி வழி அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வு சீர்காழியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவலர்கள் என்றாலே பொதுமக்கள் மத்தியில் சற்று இரக்கமற்ற குணம் உள்ளவர்கள் என்ற தவறான புரிதல் இருந்து வரும் சூழலில் காவலரின் இந்த செயல் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

Chennai Super Kings: IPL மெகா ஏலம்.. CSK தக்கவைக்கும் வீரர்கள் யார்? முழு லிஸ்ட் உள்ளே