விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வருவாய் துறையில் வேலை வாய்ப்பு, 11 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு செய்துள்ளது, மேலும் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வருவாய் துறையில் வேலை வாய்ப்பு

தமிழக அரசின் வருவாய்த் துறையில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட வருவாய் அலகில் திண்டிவனம் வட்டத்தில் காலியாக உள்ள 11 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பணியின் பெயர் : கிராம உதவியாளர்
காலி பணியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வித் தகுதி:

இந்தப் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

01.07.2025 அன்று 21 வயது நிரம்பியவராகவும் 32 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இருப்பினும் தமிழக அரசு விதிகளின் படி பி.சி, எம்.பி.சி, டி.என்.சி பிரிவினர் 39 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி, ஆதரவற்ற விதவை 42 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கூடுதலாக 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.

ஊதியம் :

ரூ. 11,100 முதல் – 35,100 வரை

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு வாசித்தல் மற்றும் எழுத்துத் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2025/09/17592411702220.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.10.2025. எனவே தமிழக அரசின் வருவாய்த் துறையில் கிராம உதவியாளர் பணியிடங்களை விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.