வரங்களை அள்ளிக்கொடுக்கும் விநாயகர்

4 months ago 7
ARTICLE AD

வந்துவிட்டது வினை தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி..!!!

ஆகஸ்ட் 27 ஆம் தேதி புத்திக்கு அதிபதியான புதன்கிழமையில் அஸ்த நட்சத்திரம் மற்றும் சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்கும் போது சதுர்த்தி திதியில் நம் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபட்டு வருவோம் வினைகளை தீர்த்துக் கொள்வோம்…

ஆவணி மாதம் சதுர்த்தி திதியில் விநாயகரின் அவதார நாள் என்பதால் ஒவ்வொரு மாதம் சதுர்த்தி திதியில் விநாயகருக்காக நாம் விரதம் இருக்கிறோம்… அதுவே அவர் பிறந்த மாதமாக சதுர்த்தி திதியாக வந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் ஆம் நம் வினைகளை தீர்க்க வந்து விட்டார் விநாயகர் பெருமான்…

விநாயகர் சதுர்த்தி நாளில் நாம் விரதம் இருந்து அவரை வழிபட்டால் கேட்ட வரங்களை கொடுத்து மகிழ்வார்… ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியான விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடகர சதுர்த்தியன போற்றி நாம் வழிபட்டு வருகிறோம்…

வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா எடுத்த காரியங்கள் தோல்வியில் முடிகிறதா? முதல் கடவுளான விநாயகரை வழிபட திறக்காத கதவுகளும் திறக்கும்… 2025 இந்த ஆண்டு சதுர்த்தி ஆகஸ்ட் 27 ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி மதியம் 22 மணிக்கு துவங்கி ஆகஸ்ட் 27ஆம் தேதி மாலை 3 52 மணி வரை சதுர்த்தி திதி உள்ளது…

இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் என்ன செய்யலாம் விநாயகரை மனதில் நினைத்துக் கொண்டு அவருக்கு பூஜைகள் செய்து புதியதாக வீடு கட்ட நினைப்பவர்கள் அதற்கான அஸ்திவாரங்களை போடலாம், பூமி பூஜை செய்யலாம், புதிதாக படிக்க நினைப்பவர்கள் அவருடைய படிப்பை ஆரம்பிக்கலாம், சேமிக்க நினைப்பவர்கள் வங்கியில் சிறிய தொகை அதாவது 100 ரூபாய் கூட செலுத்தி சேமிப்பை துவங்கலாம் மழலைச் செல்வம் வேண்டி காத்திருப்பவர்கள் விரதம் இருந்து விநாயகரை வழிபடலாம்….

திருமணத்திற்காக காத்திருப்பவர்கள் வெற்றி விநாயகரின் 108 நாமத்தை ஜெபித்து நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் நல்ல வாழ்க்கை உங்களுக்கு அமையும்…

ஐந்து வருடத்திற்கு மேல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த விநாயகர் சதுர்த்தி ஒரு வரப்பிரசாதம் இந்த நாளில் நீங்கள் விரதம் இருந்து வேண்டிய வரங்களை கேட்டு பெற்றுக் கொள்ளலாம் குறிப்பாக குழந்தை வரம் கேட்டால் அடுத்த ஆண்டு மழலைச் செல்வத்தை கையில் கொடுப்பார் நம் விநாயகர்…

சதுர்த்தி தினத்தில் சந்திரன் கன்னி ராசியில் பயணிக்கிறார் புதனின் வீடான கன்னியில் அஸ்த நட்சத்திரத்திலும் சித்திரை நட்சத்திரத்திலும் பயணிக்கும் இந்த வேளையில் பொருளாதார வசதி பணவரவு வீட்டில் பணம் பெருகுதல் செல்வம் அதிகரித்தல் அந்தஸ்து கூடுதல் போன்றவை உங்களுக்கு நடக்கும்.

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை களிமண்ணால் செய்து வீட்டில் வைத்து அவருக்கு விருப்பமான உணவுகளை படைத்து மனதார அவரை வேண்டி விநாயகரின் மந்திரங்களை உச்சரித்து அருகம்புல் மாலை சாற்றி வாழ்க்கையில் எனக்கு தீராத துன்பங்கள் தீர்த்து வை விநாயகா என்று அவருடைய பாதத்தில் சரணாகதி அடைந்து ஓம் கம் கணபதயே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி அவரை பிடிபட்டால் கேட்கின்ற அனைத்தையும் கொடுப்பார் நம் வினை தீர்த்த விநாயகர்…

Read Entire Article