காதல் யாருக்கு எப்போ வரும் எப்படி வரும் என்று சொல்ல முடியாது. ஆனால், புதிதாக ஒருவரை சந்திக்கும் போது மனதில் பூக்கும் ஒரு மத்தாப்பூ போன்ற உணர்வு தான் காதல். இந்த உணர்வை வார்த்தைகளால் எளிதில் விளக்கி விட முடியாது என்பதே உண்மை. அப்படி ஒரு காதல் தான் தனக்கு மாமியாராக நடித்த மேக்னா ராமி மீது, நடிகர் இந்திரனீலுக்கு வந்ததும்.

மேக்னா நிஜயத்திலும், இந்திரனீலை விட 6 மாதம் பெரியவர் தான். அதே போல் சீரியலிலும்ம் இந்திரனீக்கு மாற்றான் தாய் மற்றும் மாமியாராக நடித்தவர் என்பதால், இந்திரனீல் குடும்பத்தில் இவர்களின் காதலுக்கு சம்மதம் கிடைக்கவில்லை. ஒட்டுமொத்த பிரச்சனைகளும் கடந்து, வீட்டில் ஒருவழியாக சம்மதம் பெற்றே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அண்மையில் தங்களுடைய 20-ஆம் ஆண்டு திருமணம் நாளையும் கொண்டாடி முடித்தனர் மேக்னா ராமி மற்றும் இந்திரனீல் தம்பதி. அவர்கள் யார் எப்படி காதல் மலர்ந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

தெலுங்கில் பேமஸான சீரியல்களில் ஒன்று தான் சக்ரவாகம். 4 வருடங்கள் ஓடிய இந்த சீரியலில் இந்திரனில் மற்றும் மேக்னா இருவரும் நடித்திருந்தனர். அதுவும் மேக்னா மாமியாராகவும், இந்திரனில் மருமகனாகவும் நடித்திருந்தனர். மேக்னா மீது முதலில் இந்திரனீலுக்கு தான் காதல் வந்தது. சில முறை தன்னுடைய காதலை நேரடியாகவே இந்திரனீல் அவரிடம் கூறியுள்ளார். ஆனால் ஆரம்பத்தில் அதில் உடன்பாடு இல்லாததால் இந்த காதலை மேக்னா தவிர்த்துள்ளார். திரும்ப திரும்ப அவர் 9 முறை புரபோஸ் பண்ணவே... அதன் பின்னரே , இந்த அளவுக்கு நம்பை யாராலும் காதலிக்க முடியாது என புரிந்து கொண்ட மேக்னாவுக்கு இந்திரனீல் மீது காதல் வந்தது.

தன்னுடைய காதலை மேக்னா ஏற்றுக்கொள்வார் என நம்பிய இந்திரனீல் இந்த காதலில் வெற்றி பெற்றார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட போது இவர்களை பல ரசிகர்கள் விமர்சனம் செய்து பேசினார்களாம். ஆனால் அவற்றை கடந்து வந்தது, மனதுக்கு மிகப்பெரிய வேதனையான நாட்கள் என மேக்னா கூறுகிறார்.

இருவருமே தற்போது 40 வயதை கடந்து விட்ட நிலையில், இவர்களுக்கு குழந்தை இல்லாதது தான் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிடமாக மாறியுள்ளது. இது குறித்து கூறியுள்ள மேக்னா குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதை தவற விட்டுவிட்டோம் என்பது வேதனை தான். ஆனால் இனி குழந்தை பெற்று கொள்ள வேண்டாம் என்கிற முடிவை எடுத்துளோம். இந்த வயதில் குழந்தை பெற்றால், அவர்கள் வளர்ந்து நிற்கும் போது எங்களுக்கு 60 வயசுக்கு மேல் ஆகிவிடும். அந்த வயதில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எங்களால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் வீணாகிவிட கூடாது. எங்களால் அவர்கள் கஷ்டப்பட்டால் அதை தாங்கிக்கொள்ள எங்களுக்கு சக்தி இல்லை. எனவே குழந்தை வேண்டாம் என முடிவு செய்துள்ளார்களாம்.