இந்தியாவின் புகழ்பெற்ற கார் நிறுவனம் டாடா. டாடாவின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. பட்ஜெட் விலை முதல் சொகுசு கார்கள் வரை பல ரகங்களில் டாடாவின் கார்கள் இந்திய சாலைகளை ஆக்கிரமித்து வருகிறது.

Tata Sierra Jubilee Edition:

டாடாவின் கார்களில் தற்போது இந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற காராக Tata Sierra உள்ளது. தற்போது அந்த காரின் புதிய அப்டேட்டாக Tata Sierra Jubilee Edition இன்று அறிமுகாகியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

விலை:

இந்த காரில் 3 வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Smart+ Jubilee Edition - ரூபாய் 11.99 லட்சம்

Pure Jubilee Edition - ரூபாய் 13.99 லட்சம்

Adventure Jubilee Edition - ரூபாய் 16.19 லட்சம்

சிறப்புகள்:

டாடாவின் எக்ஸ்ளூசிவ் டீலர்களிடம் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரில் 10.25 இன்ச் தொடுதிரை உள்ளது. ஆன்ட்ராய்ட் ஆட்டோ அன்ட் ஆப்பிள் கார்ப்ளே, ரியர் வியூ கேமரா ரூஃப் ரெய்ல்ஸ், 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் வசதி உள்ளது.

முதற்கட்டமாக 50 ஆயிரம் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டேஷ் கேமரா வசதியும் உள்ளது. இதுமட்டுமின்றி எஸ்யூவி காரான இந்த காரில் ஃப்ரன்ட் கிரல் கிளாடிங், டெய்ல்கேட் கிளாடிங், வீல் ஆர்ச் கிளாடிங், ரூஃப் ரெய்ல்ஸ், மெக்னெடிக் சன்ஷேட்ஸ், பார்சல் ட்ரே, முன்பக்கம் மற்றும் பின்பக்கம் டேஷ் கேமரா வசதி உள்ளது.

எஞ்ஜின்:

இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் 106 எச்பி மற்றும் 145 என்எம் டார்க் இழுதிறனை கொண்டது. 6 கியர் மேனுவல் மற்றும் 7 கியர் டூயல் கிளட்ச்சில் உள்ளது. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் 160 எச்பி மற்றும் 260 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 6 கியர் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் 118 எச்பி மற்றும் 260 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டாேமெட்டிக்கில் இந்த கார் உள்ளது.

போட்டி:

இந்த கார் ஹுண்டாய் கிரெட்டா, கியா செல்டாஸ், மாருதி கிராண்ட் விதாரா, டொயோடோ ஹைரைடர், ஹோண்டா எலிவட் மற்றும் ரெனால்ட் டஸ்டர் காரகளுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சியாரா கார் ஏற்கனவே சந்தையில் சிறப்பாக விற்பனையாகி வரும் சூழலில், சியாரா மின்சார காருக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சூழலில், சியாரா ஜுபிளி எடிஷன் காரும் சந்தையில் அறிமுகமாகியுள்ளது.