வங்கியில் போலி நகை மோசடி வழக்கில் கைதான நகை மதிப்பீட்டாளர் சிறையில் உயிரிழப்பு

10 months ago 8
ARTICLE AD

மயிலாடுதுறையில் போலி நகைகளை அடகு வைத்து, 50 லட்சம் ரூபாய் பணமோசடி செய்த வழக்கில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட வங்கி நகை மதிப்பீட்டாளர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

பேங்க் ஆப் இந்தியா வங்கி

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை கச்சேரி ரோட்டில் செயல்பட்டு வருகிறது பேங்க் ஆப் இந்தியா வங்கி. இந்த வங்கியில் மயிலாடுதுறை புதுத்தெருவை சேர்ந்த ஜீவானந்தம் என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் தங்க நகை மதிப்பீட்டாளர்களாக பணிபுரிந்து வந்தார். இவர் வங்கியில் நகைகளை அடமானம் வைக்க வரும் வாடிக்கையாளர்களிடம் நன்றாக பேசி பழகி அவர்களிடம் தனது நகைகளை வாடிக்கையாளர்களின் பெயரில் அடமானம் வைத்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

வாடிக்கையாளர்கள் பெயரில் மோசடி

வாடிக்கையாளர்கள் நம்பிக்கையின் பேரில் ஜீவானந்தம் கொடுத்த நகைகைளை அடமானம் வைக்க தங்களது பெயரில் நகை அடமான பத்திரங்கள் மற்றும் வங்கி ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளனர். ஆனால், ஜீவானந்தம் என்பவர் வாடிக்கையாளர்களின் பெயரில் அடமானம் வைத்த தனது நகைகளில் அசல் தங்க நகைகளுக்கு பதிலாக போலி தங்க நகைகளை வைத்து மோசடி செய்து வந்துள்ளார்.

பதவியை சாதகமான பயன்படுத்திய ஜீவானந்தம்

மேலும், ஜீவானந்தம் தனது வங்கியில் அடமானம் வைக்கப்படும் தங்க நகைகளுக்கு தங்கத்தின் தரம் பற்றிய சான்றிதழ் அளிக்கும் பணியில் இருப்பதை தனக்கு சாதகமாக்கி கொண்டு, வாடிக்கையாளர்களின் பெயர்களில் ஜீவானந்தம் அடமானம் வைக்கும் தனது போலி தங்க நகைகளுக்கான தரம் பற்றிய உண்மை சான்றிதழை மோசடியாக அசல் தங்க நகைகளுக்கு உள்ளதுபோல அளித்துள்ளார். அவ்வாறு வாடிக்கையாளர்களின் பெயரில் ஜீவானந்தம் அடமானம் வைத்த போலி தங்க நகைகளுக்கான நகை கடன் ரசீதுகளை தானே வைத்துகொண்டு காலக்கெடுவிற்கு ஏற்றார்போல வெவ்வேறு வாடிக்கையாளர்களின் பெயரில் மாற்றி வைத்து மோசடி ஈடுபட்டு வந்துள்ளார்.

வங்கியில் நகை தரம் குறித்த சோதனை

இந்நிலையில், வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகைகளின் தரம் மற்றும் மதிப்பை உறுதிசெய்வதற்காக பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மதுரை மண்டல அதிகாரிகள் மயிலாடுதுறை கிளை வங்கியில் சோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது வங்கியில் போலி நகைகள் இருப்பதை கண்ட அதிர்ச்சியடை அவர் ஜீவானந்தம் மோசடி செய்துள்ளதை கண்டறிந்துள்ளார்.

காவல்துறையில் புகார்

அதனை அடுத்து இது தொடர்பாக பேங்க் ஆப் இந்தியா மயிலாடுதுறை கிளையில் முதுநிலை கிளை மேலாளராக பணிபுரிந்துவரும் தினேஷ் என்பவர் மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த 01.02.2025 -ம் தேதி கொடுத்த புகாரின் பேரில் ஜீவானந்தத்தின் மீது 5 பிரிவுகளின் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, மாவட்ட குற்ற பிரிவு ஆய்வாளர் அன்னக்கொடி விசாரணை மேற்கொண்டார். இதில் ஜீவானந்தம் தொடர் குற்ற செயலில் ஈடுபட்டு வந்தததும், மோசடி செய்யும் உள்நோக்கத்துடன் வங்கிக்கு சுமார் 41,23,721.37 ரூபாய் தொகையை ஏமாற்றி மோசடி செய்திருப்பதும், தெரியவந்ததால் ஜீவானந்தத்தை கைது செய்த காவல்துறையினர் ஜீவானந்ததை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த மோசடியில் பிற வங்கியின் ஊழியர்களுக்கோ அல்லது பிற நபர்களுக்கோ தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிறையில் உயிரிழப்பு

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட ஜீவானந்தம் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டதாக கடந்த பிப்ரவரி 8 -ம் தேதி உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, 9 -ம் தேதி உடலை பெற்றுசெல்லுமாறு சிறைத்துறையினர் தகவல் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் அங்கு சென்ற நிலையில், உடலை வழங்காமல் அலைக்கழித்ததாகவும், காவல் ஆய்வாளர் கையொப்பம் போடவில்லை நாளை உடலை பெற்றுகொள்ளுங்கள் என்று காவல்துறையினர் அலைக்கழித்தாகவும், இதனால் ஜீவானந்தம் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை செய்யும்படி கூறி உடலை பெறாமல் மயிலாடுதுறைக்கு திரும்பியதாக செய்தியாளர்களிடம் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article