லீக் ஆன ‘ஜனநாயகன்’: படத்தைத் திருடிய 6 பேர் கைது - இனிமேல் பார்ப்பவர்களுக்கு ஆபத்து?

1 day ago 1
ARTICLE AD

விஜயின் ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியான விவகாரத்தில் 6 பேரை கைது செய்து தமிழக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனநாயகன் லீக்

ஜனநாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் லீக் ஆனது ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மொத்த திரைப்படத்தை இணையதளத்தில் வெளியானது படக்குழுவுக்கு மேலும் பேரிடியாக அமைந்தது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்த விஜய் அரசியலில் ஈடுபட்டதால், அவரின் கடைசி படமாக ஜனநாயகன் திரைக்கு வரவிருக்கிறது. தணிக்கை சான்றிதழ் பிரச்னையால் அப்படம் வெளியாகாமல் இருந்த நிலையில், படத்திற்கு சென்சார் வழங்கப்பட்டு, தேர்தல் காரணமாக படம் வெளியிடப்படாமல் இருக்கிரது. இந்த நிலையில், இந்தப் படம் லீக்கானது கோலிவுட்டை மட்டுமில்லாமல் தென்னிந்திய திரைப்படத் துறையே கதிகலங்க வைத்திருக்கிறது.

திரைப்பிரபலங்கள் கண்டனம்

ஜனநாயகன் லீக் ஆன சம்பவத்திற்கு ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், அரசியல் கட்சி தலைவர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேவிஎன் புரடக்சன்ஸ் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், படம் லீக் ஆனது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் கொடுக்கப்பட்டு, இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தது.

6 பேர் கைது

இந்த நிலையில், விஜயின் ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியான விவகாரத்தில் 6 பேரை கைது செய்து தமிழக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜனநாயகன் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Entire Article