ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் குடும்பம் இந்தியா மற்றும் உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாகும். அவர்கள் தங்கள் தொழிலதிபர் அந்தஸ்து மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறைக்காக அடிக்கடி செய்திகளில் இடம்பிடிக்கின்றனர். மும்பையில் உள்ள அவர்களது இல்லமான 'அண்டிலியா'வில் 170-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த சொகுசு கார்களையும், பல சிறப்பு கார்களையும் வைத்துள்ளனர். அதன் விவரங்களை விரிவாகக் காணலாம்

அப்படி என்ன கார் எல்லாம் இருக்கு!

முகேஷ் அம்பானி குடும்பத்தின் மிக விலையுயர்ந்த கார் 'புல்லட்-புரூப் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்' (Bulletproof Rolls Royce Cullinan) ஆகும். இந்த ஆடம்பர காரின் விலை சுமார் ரூ. 17 கோடியாகும். பாதுகாப்பு மற்றும் ஆடம்பர வசதி ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு, இந்த கார் அவர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் மெர்சிடிஸ்-பென்ஸ் S680 கார்ட் (Mercedes-Benz S680 Guard) உள்ளது. இது குடும்பத்தினர் பயன்படுத்தும் துப்பாக்கிக் குண்டுகளைத் துளைக்க முடியாத (bulletproof) கார்களில் ஒன்றாகும். இதன் விலை சுமார் ரூ. 15 கோடியாகும்.

நீதா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானியின் கார் கலெக்‌ஷன்

நீதா அம்பானி, 'ரோல்ஸ்-ராய்ஸ் பேண்டம் VIII எக்ஸ்டெண்டட் வீல்பேஸ்' (Rolls-Royce Phantom VIII Extended Wheelbase) போன்ற சொகுசு காரை வைத்துள்ளார். இதன் விலை சுமார் ரூ. 14 கோடியாகும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஆனந்த் அம்பானி, ரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் (Rolls-Royce Cullinan Black Badge) காரை வைத்துள்ளார். இதன் விலையும் சுமார் ரூ. 14 கோடியாகும். இதனுடன், அம்பானி குடும்பத்தினர் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் எக்ஸ்டெண்டட் வீல்பேஸ் (Rolls-Royce Ghost Extended Wheelbase) காரையும் வைத்துள்ளனர். இதன் விலை சுமார் ரூ. 13 கோடியாகும்.

அம்பானி குடும்பத்திற்கு ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் மட்டுமின்றி, ஸ்போர்ட்ஸ் கார்கள் மீதும் ஆர்வம் அதிகம். அவர்களிடம் பெராரி புரோசாங்கு (Ferrari Purosangue) போன்ற சொகுசு எஸ்யூவி (SUV) கார் உள்ளது. இதன் விலை ரூ. 12 கோடியாகும். ஆகாஷ் அம்பானி பெரும்பாலும் இந்தக் காரை ஓட்டிச் செல்வதைக் காணலாம். மேலும், அதிவேகத்தில் செல்லக்கூடிய பெராரி SF90 ஸ்ட்ராடேல் (Ferrari SF90 Stradale) போன்ற சூப்பர் காரும் அம்பானிகளின் சேகரிப்பில் உள்ளது. இந்த பெராரி கார் நவீன தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் கார்கள்

அம்பானிகளின் பாதுகாப்பு ஒரு சவாலான விஷயம் என்பதால், பாதுகாப்பிற்காக அவர்கள் பல விலையுயர்ந்த கார்களைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, மெர்சிடிஸ் மேபேக் S600 கார்ட் (Mercedes Maybach S600 Guard) மற்றும் பிஎம்டபிள்யூ 760எல்ஐ ஹை செக்யூரிட்டி (BMW 760Li High Security) போன்ற கார்களைப் பயன்படுத்துகின்றனர். இவை குண்டு துளைக்காத கார்கள் மற்றும் மிக உயர்ந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டவை. இவற்றின் விலை ரூ. 9 முதல் 10 கோடி வரை இருக்கும். இவர்களிடம் 'ரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன் சீரிஸ் II' (Rolls-Royce Cullinan Series II) என்ற அல்ட்ரா-லக்சரி எஸ்யூவி காரும் உள்ளது. இந்தக் காரின் விலை 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். அம்பானி குடும்பத்தினர் தங்கள் தேவை மற்றும் ரசனைக்கேற்ப இந்தக் கார்களைத் தனிப்பயனாக்கம் (customization) செய்து வைத்துள்ளனர்.