ரேஷன் கடையில இப்படியும் ஒரு சர்ப்ரைஸா? - பொருட்கள் வாங்க வரும் மக்களின் கவனத்திற்கு

2 weeks ago 5
ARTICLE AD

திருவள்ளூர் மாவட்டத்தில் நியாய விலை கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு கூட்டுறவுத்துறை சார்பா  மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம். சி.வி.நாயுடு சாலை பெரும்பாக்கம் கூட்டுறவு நியாய விலை கடையில் கூட்டுறவுத்துறை சார்பாக நியாய விலை கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப்  தண்ணீர் பந்தலை திறந்து வைத்து மோர் மற்றும் தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார்.

இதன் பின்னர் ஆட்சியர் பேசியதாவது: கோடை காலத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்களின் தாகம் தீர்க்க கூட்டுறவுத்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் 1166 நியாய விலை கடைகளிலும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு, திருவள்ளூர் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள பெரும்பாக்கம் நியாயவிலை கடையில் தொடங்கி வைக்கப்பட்டது. எனவே நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, துணைப்பதிவாளர்கள் கோ.பாலாஜி (பொது விநியோகம்), மங்கலதாஸ் (பணியாளர்-பதிவாளர்), கண்காணிப்பாளர் மேகநாதன், கூட்டுறவுத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தை போன்று தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் உள்ள நியாய விலை கடைகளில் தண்ணீர் பந்தல் அமைத்து மக்களின் தாகத்தை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read Entire Article