புதிய பைக் அல்லது ஸ்கூட்டர் வாங்க நினைப்பவர்களுக்கு Honda நல்ல ஆப்ஷன்களை வழங்குகிறது. குறிப்பாக ரூ.1 லட்சத்திற்குள் (எக்ஸ்‌ஷோரூம்‌) பட்ஜெட்டிலும் பல மாடல்கள் கிடைக்கின்றன. தினசரி பயணங்களுக்கு, ஆபீஸுக்கு செல்ல, குடும்ப தேவைகளுக்கு இவை சிறப்பாக பயன்படுகின்றன.

Honda Shine 100

மிகக் குறைந்த விலையில் பைக் வேண்டுமென நினைப்பவர்களுக்கு Honda Shine 100 நல்ல தேர்வு. சென்னையில் இதன் எக்ஸ்‌ஷோரூம் விலை ரூ.65.64 ஆயிரம் முதல் தொடங்குகிறது. இதில் 99 cc இன்ஜின் உள்ளது. Manual கியர்பாக்ஸுடன் வருகிறது. அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிலோமீட்டர் வரை இருக்கும்.

Honda Shine 100 DX

Honda Shine 100 DX-மும் ரூ.1 லட்சத்திற்குள் உள்ள பட்ஜெட்டில்தான் உள்ளது. இதன் எக்ஸ்‌ஷோரூம் விலை ரூ.73.041 ஆயிரம். இதில் 99 cc இன்ஜின், Manual கியர்பாக்ஸ் உள்ளன. அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிலோமீட்டர்.

Honda Dio

ஸ்கூட்டர் வேண்டுமென நினைப்பவர்களுக்கு Honda Dio நல்ல தேர்வாகும். இதன் விலை ரூ.76. ஆயிரம் முதல் தொடங்குகிறது. இதில் 110 cc இன்ஜின் உள்ளது. Automatic கியர்பாக்ஸுடன் வருகிறது. அதிகபட்ச வேகம் மணிக்கு 83 கிலோமீட்டர்.

Honda Activa

நாட்டில் மிகவும் பிரபலமான ஸ்கூட்டர்களில் Honda Activa-வும் ஒன்று. Activa 110 விலை ரூ.80 ஆயிரம் முதல் தொடங்குகிறது. 110 cc இன்ஜினுடன் Automatic கியர்பாக்ஸ் கிடைக்கிறது. அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிலோமீட்டர்.

Honda Livo

Honda Livo-வும் ரூ.1 லட்சத்திற்குள் விலையில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.80 ஆயிரம் முதல் ரூ.82 ஆயிரம் வரை உள்ளது. இதில் 110 cc இன்ஜின் உள்ளது. Manual கியர்பாக்ஸுடன் வருகிறது. அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிலோமீட்டர்.

Honda Shine 125

சற்றே அதிக சக்தி வேண்டுமென நினைப்பவர்களுக்கு Honda Shine 125 பயனுள்ளதாக இருக்கும். இதன் விலை ரூ.85 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை உள்ளது. இதில் 124 cc இன்ஜின் உள்ளது. Manual கியர்பாக்ஸுடன் வருகிறது. அதிகபட்ச வேகம் மணிக்கு 102 கிலோமீட்டர்.

Honda Dio 125

Honda Dio 125-மும் இந்த பட்ஜெட்டில்தான் உள்ளது. இதன் விலை ரூ.91 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை உள்ளது. இதில் 124 cc இன்ஜின், Automatic கியர்பாக்ஸ் உள்ளன. அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிலோமீட்டர்.

Honda SP 125

பைக் வேண்டுமென நினைப்பவர்களுக்கு Honda SP 125 மற்றொரு கவர்ச்சிகரமான தேர்வாகும். இதன் விலை ரூ.92 ஆயிரம் முதல் ரூ.96 ஆயிரம் வரை உள்ளது. இதில் 124 cc இன்ஜின் உள்ளது. Manual கியர்பாக்ஸுடன் வருகிறது. அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிலோமீட்டர்.

Honda Activa 125

ஸ்கூட்டர்களில் Honda Activa 125-மும் ரூ.1 லட்சத்திற்குள் கிடைக்கிறது. இதன் விலை ரூ.92 ஆயிரம் முதல் ரூ.96 ஆயிரம் வரை உள்ளது. இதில் 124 cc இன்ஜின் உள்ளது. ஆட்டோமேட்டிக்‌ கியர்பாக்ஸுடன் வருகிறது. அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிலோமீட்டர்.

Honda QC1

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க நினைப்பவர்களுக்கு Honda QC1-மும் சிறந்த சாய்ஸ். இதன் எக்ஸ்‌ஷோரூம் விலை ரூ.90 ஆயிரமாக உள்ளது. இதில் 1.5 kWh பேட்டரி உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிலோமீட்டர்.

மொத்தத்தில் பார்த்தால்.. ரூ. 1 லட்சத்திற்குள் (எக்ஸ்‌ஷோரூம்‌) பட்ஜெட்டில் Honda-வில் இருந்து பைக்குகள், ஸ்கூட்டர்கள், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உள்ளிட்ட நல்ல மாடல்கள் உள்ளன. தினசரி தேவைகள், பட்ஜெட், Manual அல்லது Automatic தேவையைப் பொறுத்து இவற்றில் சரியான மாடலைத் தேர்வு செய்யலாம்.