ரூ.25,331.32 கோடி ஒதுக்கீடு... தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?

5 months ago 4
ARTICLE AD

தஞ்சாவூர்: முன்னுரிமை கடன்களுக்காக 2025-2026 நிதியாண்டிற்கு ரூ.25,331.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டுக்கான மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக் கூட்டம் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி முன்னிலையில், மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.

இதில் மத்திய, மாநில கடன் திட்டங்கள் தொடர்பாகவும் மாவட்டத்தின் வருடாந்திர கடன் இலக்கின் அம்சங்களையும் இக்கூட்டத்தில் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிதி ஆண்டில் அதிக கவனம் செலுத்த வேண்டிய திட்டங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் 2025-2026 நிதியாண்டில் வேளாண்மை துறை சார்ந்த பணிகளுக்கு 20,929.61 கோடி ரூபாயும், சிறு குறு தொழில் சார்ந்தது துறைக்கு 3391.1 கோடி ரூபாயும், கல்வித்துறைக்கு 50.78 கோடி ரூபாய் என 6 பிரிவுகளின் கீழ் தோராயமாக மொத்தம் 25,331.32 கோடி ரூபாய் முன்னுரிமை கடன்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வங்கியாளர்கள் இந்த இலக்கினை 100% சதவீதம் பூர்த்தி செய்ய வேண்டும் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

மத்திய ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ஸ்ரீதர், மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் வெங்கடசுப்பிரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன் மற்றும் வங்கிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

2ம் காலாண்டிற்கான விழிப்பு, கண்காணிப்பு குழுக்கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 2025ம் ஆண்டு இரண்டாம் காலாண்டிற்கான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் புலன் விசாரணையில் உள்ள வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள், நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்ட வழக்குகள், புலன் விசாரணையில் உள்ள வழக்குகள் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.

மாவட்டத்தில் வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெறாமல் மேற்கொள்ளப்படவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீருதவித்தொகைகளை பெற்றுத்தருதல்  குறித்தும் மக்களிடையே வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்தும் விவாதிக்கப்பட்டன. தொடர்ந்து, நடைபெற்ற ஆதிதிராவிடர் நலக்குழுக் கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரி விடுதிகள், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதம், பள்ளி மற்றும் விடுதிகளில் தாட்கோ மூலம் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள், பெண்கல்வி ஊக்கத் தொகை, pre Matric, Post Matric உதவித்தொகை, அயோத்திதாஸ் பண்டிதர் மேம்பாட்டு குடியிருப்பு திட்டம். ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள், இலவச வீட்டு மனைப்பட்டா, சமுதாய கூடங்கள், மயானம் மற்றும் மயானப்பாதைகள். சாதி வேறுபாடுகளற்ற மயானம், வன்கொடுமை தீருதவி, தீண்டாமை கடைபிடிக்காமால் நல்லிணக்கத்துடன் திகழும் கிராமம் சாதிச்சான்று மெய்த்தன்மை விவாதிக்கப்பபட்டன.

மேலும் பொருண்மைகள் குறித்தும் மேலும், காவல் துறை அலுவலர்கள், அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளுக்கு சென்று மாணாக்கர்களிடையே கலந்துரையாடி (Motivational Speech) மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா எஸ்.விஜயன், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, அனைத்து துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், அனைத்து ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், அரசு சார்பில்லா நிறுவனங்களுடன் தொடர்புடைய பட்டியலில் கண்ட இனத்தைச் சாராதவர்கள், பட்டியல் இனத்தைத் சேர்ந்த அலுவல்சாரா உறுப்பினர்கள், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Read Entire Article