திருச்சிராப்பள்ளி: திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பொன்மலை சந்திப்பு ரயில் நிலையத்தில், புதிய ‘ரோடு எண் 8’ (Proposed Road No. 8) அமைப்பதற்கான கட்டுமான மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, வரும் ஜூலை 11-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் பல்வேறு முக்கிய ரயில் சேவைகளில் பகுதி ரத்து, தொடக்க இடம் மாற்றம், முழு ரத்து, வழிமாற்றம் மற்றும் நேர மாற்றம் ஆகிய அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக திருச்சிராப்பள்ளி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத்.R அறிவித்துள்ளார்.

பொதுமக்கள் தங்களது பயணங்களை திட்டமிட ஏதுவாக, ரயில்களின் விவரங்கள் கீழே விரிவாகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

பகுதி ரத்து மற்றும் ரயில்கள் பாதியில் நிறுத்தப்படும் விவரம் (Partial Cancellation)

பணிகள் காரணமாக சில ரயில்கள் தங்களது இறுதி இலக்கை அடையாமல், குறிப்பிட்ட நிலையங்களுடன் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

விழுப்புரம் - திருச்சி மெமு பயணிகள் ரயில் (56111)

ஜூலை 11, 12, 13 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், லால்குடி அருகிலுள்ள வளாடி (Valadi) நிலையத்துடன் நிறுத்தப்படும். இந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து வளாடி வரை மட்டுமே இயங்கும்.

மயிலாடுதுறை - திருச்சி எக்ஸ்பிரஸ் (16833) ஜூலை 11, 12, 13 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் இந்த ரயில், திருவெறும்பூர் நிலையத்துடன் பாதியில் நிறுத்தப்படும்.

சேலம் - மயிலாடுதுறை மெமு எக்ஸ்பிரஸ் (16812) ஜூலை 11 அன்று மதியம் 14.05 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்படும் ரயில், திருச்சி சந்திப்புடன் (Trichy Jn) நிறைவுபெறும். திருச்சி - மயிலாடுதுறை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது.

காரைக்கால் - திருச்சி டெமு ரயில் (76825): ஜூலை 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காரைக்காலில் இருந்து புறப்படும் ரயில், திருவெறும்பூர் வரை மட்டுமே இயங்கும்.

திருப்பாதிரிப்புலியூர் - திருச்சி டெமு ரயில் (76811): ஜூலை 15 அன்று காலை புறப்படும் இந்த ரயில், வளாடி நிலையத்துடன் நிறுத்தப்படும்.

கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் (12084): ஜூலை 15 அன்று கோவையில் இருந்து காலை 07.15-க்கு புறப்படும் இந்த ரயில், திருச்சி சந்திப்புடன் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து மயிலாடுதுறை வரையிலான சேவை பகுதி ரத்து செய்யப்படுகிறது.

தொடங்கும் இடம் மாற்றப்பட்ட ரயில்கள் (Change in Origin)

சில ரயில்கள் திருச்சியில் இருந்து புறப்படுவதற்குப் பதிலாக, இடைப்பட்ட நிலையங்களில் இருந்து தங்களது பயணத்தைத் தொடங்கும்.

திருச்சி - மயிலாடுதுறை மெமு எக்ஸ்பிரஸ் (16834): ஜூலை 11, 12, 13 ஆகிய தேதிகளில் திருச்சிக்கு பதிலாக, தஞ்சாவூர் சந்திப்பில் இருந்து மாலை 17.25 மணிக்குத் தனது பயணத்தைத் தொடங்கும். (திருச்சி - தஞ்சை இடையே பகுதி ரத்து).

திருச்சி - விழுப்புரம் மெமு ரயில் (56112): ஜூலை 11, 12, 13 ஆகிய தேதிகளில் திருச்சிக்கு பதிலாக, ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 18.25 மணிக்கு புறப்படும். (திருச்சி - ஸ்ரீரங்கம் இடையே பகுதி ரத்து).

திருச்சி - திருப்பாதிரிப்புலியூர் டெமு ரயில் (76812): ஜூலை 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாலை 16.10 மணிக்கு ஸ்ரீரங்கம் நிலையத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கும்.

மயிலாடுதுறை - கோவை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் (12083): ஜூலை 15 அன்று மயிலாடுதுறைக்கு பதிலாக, திருச்சி சந்திப்பில் இருந்து அதன் வழக்கமான நேரமான மாலை 17.25 மணிக்கு புறப்படும். (மயிலாடுதுறை - திருச்சி இடையே பகுதி ரத்து).

திருச்சி - சென்னை எழும்பூர் சோழன் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22676): ஜூலை 15 அன்று திருச்சிக்கு பதிலாக, தஞ்சாவூர் சந்திப்பில் இருந்து மதியம் 13.00 மணிக்கு சென்னை நோக்கிப் புறப்படும். (திருச்சி - தஞ்சை இடையே பகுதி ரத்து).

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள் (Full Cancellation)

குறிப்பிட்ட தேதிகளில் பின்வரும் பயணிகள் ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படுகின்றன.

திருச்சி - காரைக்கால் டெமு (76820): ஜூலை 11 அன்று முழுவதும் ரத்து.

திருச்சி - திருப்பாதிரிப்புலியூர் டெமு (76812): ஜூலை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் முற்றிலும் ரத்து.

காரைக்கால் - திருச்சி டெமு (76819): ஜூலை 11 அன்று முற்றிலும் ரத்து.

தஞ்சாவூர் - திருச்சி பயணிகள் ரயில் (56819): ஜூலை 13 அன்று முற்றிலும் ரத்து.

காரைக்கால் - திருச்சி டெமு (76825): ஜூலை 15 அன்று இயக்கப்படாது.

முக்கிய ரயில் வழிமாற்றம் (Diversion of Train Service)

செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (16848): ஜூலை 15 அன்று செங்கோட்டையிலிருந்து புறப்படும் ரயில், வழக்கமான பாதைக்கு பதிலாக மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர் வழியாக மயிலாடுதுறைக்கு திருப்பி விடப்படும்.

தவிர்க்கப்படும் நிறுத்தங்கள்

கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை, கொளத்தூர், திருச்சி சந்திப்பு, மஞ்சத்திடல், திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் ஆகிய நிலையங்களில் இந்த ரயில் நிற்காது.

கூடுதல் நிறுத்தங்கள்

பயணிகளின் வசதிக்காக அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பேரளம் ஆகிய நிலையங்களில் தற்காலிக நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வழிநெடுகிலும் ரயில்கள் தாமதப்படுத்தப்படும் விவரம் (Regulation)

பணிகள் நடக்கும் நேரத்தில் தண்டவாளப் பாதையை கடக்கும் சில ரயில்கள் வழியில் ஏதேனும் ஒரு சவுகரியமான இடத்தில் குறிப்பிட்ட நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும் (Regulated)

தஞ்சாவூர் - திருச்சி பேஸஞ்சர் (56819): ஜூலை 12 அன்று வழியில் 30 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

சென்னை எழும்பூர் - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12635): ஜூலை 13 அன்று வழியில் 40 நிமிடங்கள் தாமதப்படுத்தப்படும்.

சேலம் - மயிலாடுதுறை மெமு (16812): ஜூலை 13 அன்று வழியில் 30 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

திருப்பாதிரிப்புலியூர் - திருச்சி டெமு (76811): ஜூலை 15 அன்று 20 நிமிடங்கள் தாமதமாகும்.

குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16128): ஜூலை 14 அன்று புறப்படும் ரயில், வழியில் அதிகபட்சமாக 70 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

சென்னை எழும்பூர் - திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் (22675): ஜூலை 15 அன்று வழியில் 40 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் (Rescheduling)

மயிலாடுதுறை - கோவை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் (12083): ஜூலை 11, 12, 13 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறையில் இருந்து வழக்கமான நேரத்திற்கு பதிலாக 40 நிமிடங்கள் தாமதமாக மாலை 15.45 மணிக்கு புறப்படும்.

மதுரை - சென்னை எழும்பூர் தேஜஸ் எக்ஸ்பிரஸ் (22672): ஜூலை 13 அன்று மதுரையிலிருந்து வழக்கமான நேரத்திற்கு பதிலாக 60 நிமிடங்கள் தாமதமாக மாலை 16.30 மணிக்கு புறப்படும்.

மயிலாடுதுறை - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (16847): ஜூலை 15 அன்று மயிலாடுதுறையிலிருந்து 60 நிமிடங்கள் தாமதமாக மதியம் 13.35 மணிக்கு புறப்படும்.

தூத்துக்குடி - கச்சிகுடா எக்ஸ்பிரஸ் (17616): ஜூலை 15 அன்று தூத்துக்குடியில் இருந்து 95 நிமிடங்கள் தாமதமாக காலை 09.15 மணிக்கு புறப்படும்.

ரயில் பயணிகள் இந்த தற்காலிக மாற்றங்களை கவனித்து, தங்களது பயணத்தை அதற்கேற்ப அமைத்துக் கொள்ளுமாறு தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.