ரஜினி நடித்த எந்திரன் , 2.0 ஆகிய படங்களை இயக்கி இயக்குநர் ரஜினியின் அடுத்த படத்தில் நடிகராகவும் அறிமுகமாக இருக்கிறார். சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு வில்லனாக இயக்குநர் ஷங்கர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியகையுள்ளது.

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் ரஜினிகாந்த் அடுத்தபடியாக தலைவர் 173 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 173 ஆம் படம் அறிவிக்கப்பட்டது. முன்னதாக சுந்தர் சி இந்த படத்தை இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி பின் சுந்தர் சி படத்தில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ரஜினியை இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. அண்மையில் தலைவர் 173 படத்தின் இயக்குநர் மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாகவும் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

தற்போதைய நிலை என்ன ?

சிபி சக்கரவர்த்தி ரஜினிக்காக எழுதிய திரைக்கதையில் ரஜினிக்கு திருப்தி ஏற்படாடதால் தலைவர் 173 படத்திற்கு அவர் அஸ்வத் மாரிமுத்துவை அனுகியுள்ளதாகவும். அதே நேரம் சிபி சக்கரவர்த்தி கதையில் திருப்தி ஏற்பட்டால் நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் மற்றும் ஷோபனா நடிக்க இருப்பதாகவும் , ரஜினியின் மகனாக மலையாள நடிகர் பாசில் ஜோசப் நடிக்க இருப்பதாகவும் , கமல்ஹாசன் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வில்லனாகும் ஷங்கர்

மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக இயக்குநர் ஷங்கரை நடிக்க வைக்க சிபி சக்கரவர்த்தி முடிவு செய்துள்ளார். இந்த கதாபாத்திரம் பிடித்திருந்ததால் சங்கர் இந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக ரஜினி நடித்த எந்திரன் மற்றும் 2.0 ஆகிய ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்தவர் ஷங்கர். தற்போது இந்த கூட்டணியை ஒரே நேரத்தில் திரையில் பார்ப்பது என்பது ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும் என நம்பலாம்.