ரஜினிக்கு விஜய் மீது பொறாமையா? அவர் ஏற்கனவே ஒரு தலைவர்..லதா ரஜினிகாந்த் அதிரடி பேச்சு

1 hour ago 1
ARTICLE AD

திருமதி லதா ரஜினிகாந்த் அண்மையில் மக்கள் மேடை என்கிற இயக்கத்தை தொடங்கினார். அவர் தனது இயக்கத்தை அறிவித்த அடுத்த நாளே திரு அண்ணாமை அவர்கள் புதிதாக இயக்கம் தொடங்கினார். விஜய் முதல்வரானது பிடிக்காத ரஜினிதான் தனது மனைவியின் வழியாக புதிதாக இயக்கம் தொடங்கிருப்பதாக பல குற்றச்சாட்டுக்கள் சமூக வலைதளத்தில் முன்வைக்கப்பட்டன. இது குறித்து மதுவந்தி டாக்ஸ் சேனலில் பேசிய லதா ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்

மக்கள் மேடையில் அண்ணாமை இணைவாரா ?

மக்கள் மேடை என்பது மக்கள் சக்தியை ஒன்றாக திரட்டுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம். முன்பே இந்த இயக்கத்தை நாங்கள் துவங்கிவிட்டோம். சமீப காலத்தில் எங்கள் இயக்கம் சார்பாக பல முயற்சிகளை எடுத்து வருகிறோம்.  துரதிர்ஷ்டவசமாக நாங்கள் எங்கள் இயக்கத்தைப் பற்றி அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நாளே அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார். நாங்கள் நல்ல காரியங்கள் செய்தபோது யாரும் அதைப் பற்றி செய்தி வெளியிடவில்லை. ஆனால் இந்த மாதிரி ஒரு சர்ச்சை எப்போ வரும் என்று காத்திருந்து செய்தி வெளியிடுகிறார்கள் . சாமானியர் முதல் உயர் அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் எங்கள் மக்கள் மேடையில் இணைந்து பணியாற்றலாம். குறிப்பிட்ட சிலர் தான் இந்த இயக்கத்தில் சேர வேண்டும் என்றில்லை. நாளைக்கு விருப்பப்பட்டால் அண்ணாமை அவர்களும் மக்கள் மேடையில் இணையலாம்.

மக்கள் மேடை அரசியல் கட்சியாக மாறுமா ?

மக்கள் மேடை எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாறுமா என்கிற கேள்விக்கு பதிலளித்த லதா ரஜினிகாந்த் " முதலில் நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் செய்யும் காரியத்தையும் என் கணவருடன் சம்பந்தபடுத்தக் கூடாது. அவருக்கு என்று ஒரு பாதை அவருக்கென்று ஒரு குறிக்கோள் இருக்கிறது.  அதனால் என்னையும் அவரையும் தொடர்புபடுத்தி எழுதுவதை நிறுத்துங்கள். " என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கு பொறாமையா ?

பிரபலமாக இருக்கவர்களைப் பற்றி பேசுபவர்கள் அதிகம். இத்தனை வருடமாக தெரிந்த ஒரு நபரை பேசுவது என்பதே பெரிய தவறு. ரஜினி ஏற்கனவே ஒரு பெரிய தலைவர். தலைமைத்துவ பண்பை அவரிடம் தான் பலர் கற்றுக் கொள்கிறார்கள். குனத்திலும், தலைமைத்துவத்திலும் அவர் ஒரு முன் உதாரணமாக இருக்கிறார். ரஜினி ஒரு ரோல் மாடல். அவரை இந்த அளவிற்கு கொண்டு வந்து பேசுவது என்பதே பெரிய தவறு. தீயதை பரப்புபவர்கள் ஒரு சிறு குழு இருக்கிறார்கள். அவர்கள் ஒரு சிறிய விஷயத்தை பரப்பி மக்கள் மனதில் விஷத்தை விதைக்கிறார்கள். வாய் கூசாம பேசுவது என்பது தமிழ் மரபு இல்லை.

சனாதன தர்மம் குறித்து லதா ரஜினிகாந்த்

நான் சின்ன வயதில் நுங்கம்பாக்கத்தில் இருந்தேன். அப்போது எங்கள் வீட்டைச் சுற்றி பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். நாங்கள் எல்லாரும் ஒரு குடும்பம் போல் தான் இருந்தோம். இப்படிப்பட்ட தமிழகத்தை தான் நான் பார்த்திருக்கிறேன். அவரவர் தர்மத்தை காப்பாற்றுவதற்கும் மற்றவர்களை இழிவுபடுத்துவதற்கும் வித்தியாசம் இருக்கு. எந்த ஒரு தர்மத்தையும் நாம் மதிக்கனும். சனாதனம் என்பதைப் பொறுத்தவரை எல்லாரையும் மதிக்கனும் என்பது தான்.

Read Entire Article