Judgement : ’வெறும் 730 ரூபாய்க்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு’ நடந்தது என்ன?

1 hour ago 1
ARTICLE AD

பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 25 வருடங்கள் கழித்து மூன்று பேருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

கருணாநிதிக்காக களத்தில் இறங்கியவருக்கு சிறை

கடந்த 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது நள்ளிரவில் திமுக தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, முரசொலி மாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்படானர். இதற்கு எதிராக திமுக தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்றைய தினம் மதுரை திடீர் நகரில் மாறன் என்பவரு தன்னுடைய கட்சிக்காரர்களுடன் கருணாநிதி கைதுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த நிலையில், காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில், அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது கற்களை எரிந்து நீதிமன்றத்தின் சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் அதே நேரத்தில் அதனை தடுக்க முயன்ற காவல் ஆய்வாளரான வானமீலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவரது காது பகுதியில் கற்கள் பட்டு அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டதாகவும் மாறன் உள்ளிட்டோர் மீது புதிய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

வழக்கு தொடர்ந்து விசாரணை

2001ல் தொடரப்பட்ட மாறன் உள்ளிட்டோர் மீதான வழக்கு 2005ல் அமர்வு நீதிமன்றம் வந்தது. அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு பேர் வழக்கு நிலுவையில் இருக்கும் காலத்திலேயே இறந்துவிட்ட நிலையில், மீதம் இரண்டு பேர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாத சூழலில் இந்த வழக்குகள் தனித் தனியாக பிரிக்கப்பட்டன.  பல முறை இந்த வழக்கில் மாறன் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை கடந்த 10ஆம் தேதி மதுரை மாவட்ட 4வது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உதயவேலவன், நீதிமன்றத்தின் சொத்துகளை சேதப்படுத்திய விவகாரத்தில் எந்த தயவும் குற்றவாளிகளுக்கு காட்ட முடியாது என கூறி, மாறன் உள்ளிட்ட மூன்று பேருக்கும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதற்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

சேதப்படுத்தப்பட்ட சொத்த மதிப்பு வெறும் 730 ரூபாய்

நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றிருக்கும் திமுக தொண்டர் மாறன் சேதப்படுத்தியதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ள சொத்தின் பாதிப்பு மதிப்பு வெறும் 730 ரூபாய் என பொதுப்பணித்துறை மதிப்பீடு செய்து அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. வெறும் 730 ரூபாய் பாதிப்பு ஏற்படுத்தியதற்காக 25 ஆண்டுகள் கழித்து 57வயதான மாறனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்திருக்கிறது நீதிமன்றம்.

Read Entire Article