யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப்பெற்றவர்கள் கவனத்திற்கு...

3 weeks ago 3
ARTICLE AD

தஞ்சாவூர்: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் கீழ் நேர்முகத் தேர்விற்கு செல்பவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை அளிக்கப்பட உள்ளது. இதற்கு https://naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செயல்முறை கடந்த 13ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் முதன்மைத் தேர்வு முடிவுகள் நவம்பர் 11-ம் தேதி வெளியானது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 155 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில், அவர்கள் நேர்முகத் தேர்விற்கு தயாராகும் வண்ணம் தமிழ்நாடு அரசு ரூ.50,000 ஊக்கத்தொகை அளிக்கிறது.

2025-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலை, முதன்மை ஆகிய 2 கட்டம் நிறைவடைந்து, நேர்முகத் தேர்விற்கு தகுதியானவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 2,736 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 155 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் கீழ் நேர்முகத் தேர்விற்கு செல்பவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை அளிக்கப்பட உள்ளது. இதற்கு https://naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் நவம்பர் 13 முதல் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வருகிறது.

கடந்த நவம்பர் 11-ம் தேதி வெளியான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 155 பேர் தேர்ச்சி பெற்று, இறுதி கட்டத்திற்கு தகுதிப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 136 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது 13.97 சதவீதம் அதிகம் ஆகும். அதுமட்டுமின்றி, தேர்ச்சி பெற்றவர்களின் 87 பேர் தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள்.

சிவில் சர்வீஸ் பதவிகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் சாதிக்கும் வண்ணம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவு 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கட்டணமில்லாமல், தங்கும் வசதியுடன் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தேர்விற்கு தயாராகும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் முதல்நிலைத் தேர்விற்கு தயராகும் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு, மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்விற்கு தகுதிபெறும் நபர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 2025-26 பட்ஜெட்டில், முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் நேர்முகத் தேர்விற்கு செல்லும் இளைஞர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த ஆண்டு முதல் அத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான இந்த நிதி ஆண்டில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டு முதல்நிலைத் தேர்விற்கு தயாராகும் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு மாதம் ரூ.7,500 வழங்கப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற 659 பேருக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தற்போது, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 155 பேருக்கு ரூ.50,000 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக இத்தொகை நேரடியாக பயனர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க https://naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இணையதளத்தில் உள்ள அறிவிக்கையைப் படித்து வரும் 24.11.2025 வரை விண்ணப்பிக்குமாறு நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவு சிறப்பு திட்ட இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார். தேர்வர்கள் விவரம் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை அளித்து பதிவு செய்ய வேண்டும்.

Read Entire Article