மேட்ரிமோனியில் வந்த வரன் !! திருமண ஆசை காட்டி ரூ 9.80 லட்சம் மோசடி !! IT பெண் ஊழியர் ஏமாற்றம்

திருப்பத்துாரை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரரின் 28 வயது மகள், பெங்களூரில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். திருமணம் செய்து வைக்க பெற்றோர் வரன் தேடினர். மேட்ரிமோனி தகவல் வாயிலாக 30 வயது வாலிபர் பேசியுள்ளார். சென்னையில் வசிக்கிறேன். 'நிக்ஸ் குரூப்' என்ற நிறுவனத்தை துபாய் மற்றும் சென்னையில் நடத்தி வருகிறேன் என கூறியுள்ளார்.

பெண்ணின் பெற்றோரை சம்மதிக்க வைத்து மொபைல் போன் மூலம் பெண்ணிடம் பேசி வந்துள்ளார். இருவரும் இரண்டு முறை சந்தித்தாக கூறப்படுகிறது. தன் நிறுவனத்தின் பண பரிவர்த்தனையை வருமான வரித்துறை முடக்கி விட்டதால் பணம் கொடுத்து உதவுமாறு வாலிபர் கேட்டுள்ளார். பின், அப்பெண்ணின் டெபிட் கார்டை வாங்கி, அதன் மூலம் சிறுகச் சிறுக, 9.80 லட்சம் ரூபாயை எடுத்துள்ளார். அவரின் நடத்தையில் சந்தேகமடைந்த அப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும், வாலிபர் கூறிய முகவரிக்கு சென்ற போது, அவர் அங்கு வசிக்காதது தெரிய வந்தது.

ஏமாற்றப்பட்டத்தை அறிந்த அப்பெண், தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, மொபைல் போன் எண், இன்ஸ்டாகிராம் முகவரி ஆகியவற்றை கொண்டு விசாரித்தனர். மேற்கு தாம்பரம், கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்த கோபிநாத் ( வயது 30 ) என்பரை போலீசார் கைது செய்தனர்.

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் !! மென்பொறியாளரிடம் 24.89 லட்சம் ரூபாய் மோசடி

சென்னை மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் சுதா கார்த்திக் ( வயது 44 ) மென்பொறியாளர். கடந்த பிப்ரவரி 10ம் தேதி, சேத்துப்பட்டில் உள்ள கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் , ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என, ஆசை வார்த்தை கூறி, 24.89 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களை கைது செய்து, இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி , வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 17 - ம் தேதி மோசடியில் ஈடுபட்ட கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தீபா ( வயது 26 ) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மோசடிக்கு உடந்தையாக செயல்பட்டு தலைமறைவாக இருந்த, கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த கிஷோர் ( வயது 27 ) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மகளிர் விடுதியை மேல் வாடகைக்கு விட்டு பெண் மோசடி !!

சென்னை திருவான்மியூர் கிழக்கு காமராஜர் தெருவில் ஆகாஷ் என்பவரின் கட்டடம் உள்ளது. இதில், கவிதா என்பவர் பெண்கள் விடுதி நடத்தி வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன், முகமது சப்தெஸ் ( வயது 32!) என்பவரை தொடர்பு கொண்ட கவிதா விடுதியை நடத்த கேட்டார். இதற்கு சம்மதித்த முகமது சப்தெஸ் 5 லட்சம் ரூபாய் முன்பணம் மற்றும் இரண்டு மாத வாடகையாக 45,000 ரூபாயை கவிதாவிடம் கொடுத்துள்ளார்.

வெளிநாடு சென்று திரும்பிய ஆகாஷ், விடுதியில் சென்று விசாரித்த போது, கவிதா மேல் வாடகைக்கு விட்டு பண மோசடி செய்து தெரிந்தது. முகமது சப்தெஸ் அளித்த புகாரில், திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிந்து கவிதாவை தேடி வருகின்றனர்.