மெல்ல விடை கொடு விடை கொடு மனமே.. விருதுநகர் முன்னாள் மாவட்ட ஆட்சியர் நெகிழ்ச்சிக் கடிதம் !

5 months ago 4
ARTICLE AD

என் பணிக்காலத்தில் உறுகணையாக இருந்த அனைவருக்கும் குடும்பத்தினருக்கும் என் அன்பும் நன்றியும் வணக்கமும். மாணவச் செல்வங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் - ஜெயசீலன் ஐ.ஏ.எஸ்.,

விருதுநகர் அன்பைப் பெற்ற மாவட்ட ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில் 2023 முதல் விருதுநகர் ஆட்சியராக பணியாற்றிய ஆட்சியர் வீ.பி.ஜெயசீலன். சென்னை மாநகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரியா விடைபெற்றார். புதிய மாவட்ட ஆட்சியராக சுகபுத்ரா பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்திய ஜெயசீலன் ஐ.ஏ.எஸ்., அவர்கள், விருதுநகர் மாவட்ட மக்களுக்கு எழுதிய கடிதத்தை எக்ஸ் தலத்தில் பதிவு செய்துள்ளார்.

விருதுநகர் மக்களுக்கு நெகிழ்ச்சியான கடிதம்

அதில்..,” கலெக்டராக வேண்டும் என்ற கனவு பத்தாம் வகுப்பில் வந்தது. கல்வி மற்றும் கடும் உழைப்பின் வழியாக ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்று அடுத்தடுத்த பொறுப்பு களுக்குப்பிறகு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றியதை எண்ணி பெருமை கொள்கிறேன். விருதுநகர் மாவட்டம் தொழில், வேளாண்மை, வர்த்தகத் துறைகளில் கடந்த ஒரு நூற்றாண்டில் நிகழ்த்திய வளர்ச்சி இம்மக்களின் உழைப்பின் சிறப்பை விளக்குகிறது. கல்வி, உயர்தொழில்கள் மற்றும் பொருளதாரத்தில் நம் மாவட்டம் இன்னும் பல மடங்கு உயிர்த்து செழிப்பதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

பணிக்காலத்தில் உறுகணையாக இருந்த அனைவருக்கும் குடும்பத்தினருக்கும் என் அன்பும் நன்றியும்

மாவட்டத்தின் அமைச்சர்கள், சக அலுவர்கள், சார்நிலைப் பணியாளர்கள், நேர்முக உதவியாளர்கள் என அனைவரும் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றியதை மகிழ்வோடு நினைவு கூறுகிறேன். விருதுநகர் மாவட்டத்தின் அன்பு மக்களுக்கும், என் பணிக்காலத்தில் உறுகணையாக இருந்த அனைவருக்கும் குடும்பத்தினருக்கும் என் அன்பும் நன்றியும் வணக்கமும். மாணவச் செல்வங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.

Read Entire Article