முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் ராகேஷ் கசியப் தலைமையிலான மத்திய கண்காணிப்பு குழுவினர் அணையின் 2 மற்றும் 9 ஆகிய ஷட்டர்களை இயக்கி பார்த்து ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தின் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழ்வது முல்லைப் பெரியாறு அணை. இந்த முல்லை பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, கடந்த 2014ல் மூன்று பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. பின் 2022இல் இக்குழுவில் இரு மாநில தொழில் நுட்ப வல்லுனர்கள் இருவரை சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது இந்த குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் ராகேஷ் உள்ளார்.

"பிரதமர் மோடியின் இரு தூண்கள்" உளவு மன்னன் அஜித் தோவல் மீண்டும் நியமனம்! பி.கே.மிஸ்ராவுக்கும் பதவி நீட்டிப்பு!

தமிழக பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்பிரமணியம், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அசோக்குமார் சிங், கேரள நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமை பொறியாளர் பிரியேஷ் உள்ளனர். நேற்று முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.85 அடியாக உள்ள நிலையில், நடைபெறக்கூடிய ஆய்விற்கு கேரள மாநிலம் தேக்கடி படகுத்துறை பகுதியில் இருந்து அதிகாரிகள் படத்தின் மூலம் அணை பகுதிக்கு சென்றனர்.

Chandrababu Naidu: ஆந்திர முதல்வராகப் பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு; 5 கோப்புகளில் அதிரடி கையெழுத்து- என்ன தெரியுமா?

அங்கு மெயின் அணை பேபி அணை ஷட்டர் பகுதி கேலரி அணையின் நீர் கசிவு நீர் இருப்பு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் இந்த ஆய்வின் போது 2 மற்றும் 9 ஆகிய ஷட்டர்களை இயக்கி பார்த்தனர். பேபி அணை பலப்படுத்துவதற்கு தேவையான பகுதிகள் அங்குள்ள மரங்கள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தனர். முல்லைபெரியாறு அணையில் பருவநிலை மாற்றத்தை ஒட்டி செய்துள்ள, செய்ய வேண்டிய வழக்கப்பணிகள் குறித்தும் தொடர்ந்து வல்லகடவு பாதை உள்ளிட்டவற்றை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஆய்வு முடிவு பெற்று மாலை 4 மணிக்கு குமுளி அருகே உள்ள ஒண்ணாமையில் பகுதியில் முல்லை பெரியாறு சூப்பர்வைசரி கமிட்டி அலுவலகத்தில் குழு தலைவர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டமானது சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட முடிவுகள் உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கையாக அனுப்பப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக முல்லைப் பெரியாற்றில் புதிய அணை என்று கேரளா கூறிவரும் வரும் சூழலில் இந்த ஆய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.