முத்தங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பலித்த மதுரை மீனாட்சி அம்மன்

1 year ago 7
ARTICLE AD

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழா;  3ஆம் நாளில் மதுரை மீனாட்சிஅம்மன் முத்தங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பலித்தார்.

பெண்கள் தங்கள் சக்தியை உணர்ந்து போராடி வெல்ல வேண்டும் என்பதே

அநீதிகளையும், அதர்மத்தையும் எதிர்த்து பெண் சக்தி போராடியதையே நவராத்திரியாக கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகிறது. இந்த நவராத்திரியின் புராணக் கதைகள் உணர்த்தும் உண்மை பெண்கள் தங்கள் சக்தியை உணர்ந்து போராடி வெல்ல வேண்டும் என்பதே ஆகும். இதன் காரணமாகவே, அம்பிகை வெற்றி பெற்ற 10வது நாளை விஜயதசமியாக கொண்டாடுகிறோம். நவராத்திரி பிறந்து தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றுவரும் நிலையில் வரும் 11ம் தேதி ஆயுத பூஜையும், 12ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.

- IPL Player Retain: ரோகித் இன், டூப்ளெசிஸ் அவுட் - ஐபிஎல் தக்கவைப்பு விதி, ஒவ்வொரு அணிக்குமான 6 வீரர்கள் யார்?

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம் பக்தர்கள் மகிழ்ச்சி

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 3-ம் தொடங்கி வரும் 12ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். முதல் நாள் நிகழ்ச்சியில் இராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார், இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ஊஞ்சலில் அமர்ந்து அருள்பாலித்தார்.

மீனாட்சியம்மன் முத்தங்கி சேவை சிறப்பு அலங்காரம்

இந்நிலையில் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி சன்னதியின் 2- ஆம் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு மண்டபத்தில் மீனாட்சியம்மன் முத்தங்கி சேவை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவராத்திரியை முன்னிட்டு கோயிலின் நான்கு கோபுரங்கள் மற்றும் ஆடி வீதிகளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. .

முத்தங்கி சேவை அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்

நவராத்திரி உற்சவ விழாவையொட்டி சிவபெருமான் திருவிளையாடல்களை எடுத்துரைக்கும் வகையிலான அமைக்கப்பட்ட கொலு மண்டபத்தில், 13 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு திருவிளையாடல் புராணங்கள் இடம் பெற்றுள்ளன. நவராத்திரி முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைக்கப்பட்ட கொலுமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை, கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பார்த்து சென்றனர். முத்தங்கி சேவை அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனை பக்தர்கள் மனமுருக தரிசனம் செய்தனர்.

ஆயுத பூஜை -  விஜயதசமி

இந்தியாவில் இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி உள்ளது. நவராத்திரி பண்டிகையாக வட இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும் தமிழ்நாட்டில் நவராத்திரியின் கடைசி நாள் ஆயுத பூஜையாகவும், அதற்கு அடுத்த நாள் விஜயதசமியாகவும் தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படுவது குறிப்பிடதக்கது.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TN Rains: சென்னையில் வெளுக்கும் மழை! 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - மக்களே அலர்ட்

Read Entire Article