முதியவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம் : மயிலாடுதுறையில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!

2 months ago 8
ARTICLE AD

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே தொடர்ந்து மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்த 62 வயது முதியவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நடந்தது என்ன?

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட கருவாழக்கரை பகுதியில், பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், கடந்த 05.01.2026 அன்று செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான தனிப்படையினர் கருவாழக்கரை பகுதியில் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கருவாழக்கரை வள்ளுவர் தெருவைச் சேர்ந்த முத்து என்பவரது மகன் 62 வயதான முதியவர் சக்திவேல் என்பவர், தனது வீட்டின் பின்புறம் ரகசியமாக பாண்டிச்சேரி சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

170 லிட்டர் சாராயம் பறிமுதல்

காவல்துறையினர் அந்த இடத்தில் அதிரடி சோதனை நடத்தியபோது, விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 170 லிட்டர் பாண்டி சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, சக்திவேலை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

கைது செய்யப்பட்ட சக்திவேல் மீது ஏற்கனவே பல்வேறு மதுவிலக்கு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அவர் தொடர்ந்து இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) G. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், சக்திவேலை குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல் முறையாக வழங்கப்பட்டதை அடுத்து, இன்று (24.01.2026) செம்பனார்கோவில் போலீசார் சக்திவேலை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில்;

* பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி குண்டர் சட்டம் பாயும்.

* கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் தொடர்ந்து மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள்.

* சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

புள்ளிவிவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 50 நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Read Entire Article