தேனி: கொட்டக்குடி கிராமத்திற்கு முதல் முறையாக அரசு பேருந்து சேவை தொடக்கம்!

1 hour ago 1
ARTICLE AD

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கொட்டக்குடி ஊராட்சி அமைந்துள்ளது. கொட்டக்குடி, குரங்கணி, முதுவார்குடி, சென்டிரல் ஸ்டேஷன், டாப் ஸ்டேஷன், கொழுக்குமலை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் உள்ளன.

போடியில் இருந்து குரங்கணி, செண்டிரல் ஸ்டேஷன், கொட்டக்குடி கிராமங்களுக்கு தார்ச்சாலை வசதி அமைக்கபட்டுள்ளது. ஆனால் குரங்கணி வரை மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. குரங்கணிக்கு 1 கி.மீ. தூரத்துக்கு முன்பாக கொட்டக்குடி சாலை சந்திப்பு உள்ளது. அங்கிருந்து 1½ கி.மீ. தொலைவில் உள்ள கொட்டக்குடிக்குச் செல்லும் சாலையில் பேருந்துகள் இயக்கப்படுவது கிடையாது.

இதனால் இந்தக் கிராமங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் ஜீப் அல்லது நடந்துதான் செல்ல வேண்டும். மேலும்  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நடந்தும், ஆட்டோக்கள் அல்லது இருசக்கர வாகனங்களில் கொட்டக்குடி சாலை சந்திப்பு வரை வந்து அங்கிருந்து பேருந்துகளில் சென்று வருகின்றனர். கொட்டக்குடிக்குச் செல்லும் சாலை குறுகலாக உள்ளதால் அங்கு பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. தங்கள் கிராமத்துக்கு பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த வாரம் தேனி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று கொண்ட வைத்திநாதன், கொட்டக்குடிக்கு அரசு பேருந்து சேவை தொடங்குவது தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். அதன் படி போடியில் இருந்து குரங்கணிக்கு காலை 5.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்தை கொட்டக்குடி சாலையில் இயக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து வேறு அரசுப் பேருந்தை கொட்டக்குடிக்கு நேற்று சோதனை முறையில், அதிகாரிகள்  இயக்கிப் பார்த்தனர்.

அந்தச் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமையவே, நேற்று மாலை முதல் கொட்டக்குடி கிராமத்திற்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இந்த அரசுப் பேருந்து போடியில் இருந்து தினமும் காலை, மாலை நேரங்களில் கொட்டக்குடிக்கு இயக்கப்படவுள்ளது.  தினமும் காலை மாலை குரங்கணிக்கு 56 பயணிகள் செல்லும் வசதி கொண்ட பேருந்து மாற்றப்பட்டு 45 பயணிகள் செல்லும் குறுகிய அளவு பேருந்து மூலம் கொட்டக்குடிக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதுவரை பேருந்து தடமே கண்டறியப்படாத கொட்டகுடி மலை கிராமத்தில் முதன் முதலாக பேருந்து நுழைந்தது கண்டு மபை கிராம மக்கள் உணர்ச்சி பொங்க மிகுந்த மகிழ்ச்சியுடன் பேருந்து வரவேற்றனர்.

Read Entire Article