சட்டமன்ற தேர்தலில் விஜயின் வெற்றியைத் தொடர்ந்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வந்த ராதன் பண்டித் தற்போது அக்கட்சியின் அரசியல் வட்டாரத்தில் இருந்து விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் பின்னணி குறித்து பல்வேறு கருத்துகளும், தகவல்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் முதல்வர் விஜய்யின் திரை பயணத்திலும் அரசியல் பயணத்திலும் அவருக்கு மிக முக்கிய நபராக இருந்து ஆலோசனை வழங்கி வந்தவர் பிரபல ஜோதிடர் ராதன் பண்டிட். முதலமைச்சராக விஜய் பதவியேற்றப்பின் தமிழக முதல்வரின் அரசியல் பிரிவுக்கான சிறப்பு அதிகாரியாக ராதன் பண்டித் நியமிக்கப்பட்டார். இதற்கு தெவக கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் ராதன் பண்டித்க்கு வழங்கிய பதவி திரும்பபெறப்பட்டது.

சட்டமன்ற தேர்தலில் விஜய் நிச்சயம் வெற்றிபெறுவார் என கூறி வந்த ராதன் பண்டித் தேர்தல் முடிவுகளுக்குப் பின் பெரியளவில் பேசப்பட்டார். ஆனால் தற்போது தவெக கட்சித் தொடர்வான விவகாரங்களில் இருந்து ராதன் பண்டித் விலகியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ராதன் பண்டித் பேச்சால் சர்ச்சை

விஜய்யின் அரசியல் பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் ரத்தன் பண்டிட் அவருக்கு மிக முக்கியமான ஆலோசனை வழங்கியவர். விஜய்யின் ஜாதகத்தை ஆய்வு செய்த அவர், எதிர்காலத்தில் விஜய் அரசியலில் உயர்ந்த நிலையை அடைவார் என்றும், முதலமைச்சராகும் வாய்ப்பு இருப்பதாகவும் கணித்தார்.

இதனிடையே, வெற்றி சேனல் தொடக்க விழாவில் ரத்தன் பண்டித் பேசிய வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டதிலும், கட்சியின் கொடி உருவாக்கத்திலும் தமக்கு முக்கிய பங்கு இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், விஜய்யின் அரசியல் பயணத்தில் தான் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

கரூர் சம்பவம் குறித்து எச்சரிக்கை

கரூர் சம்பவத்திற்கு முன்பே விஜய்க்கு சவாலான 73 நாட்கள் குறித்து ரத்தன் பண்டிட் எச்சரித்ததாகவும், அந்த காலகட்டத்திலும் அவருக்கு ஆதரவாக இருந்ததாகவும் ராதன் பண்டித் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். மேலும், தேர்தல் முடிவுகள் வெளியான நாளன்று காலையிலும் விஜய்யை சந்தித்த அவர், விஜய் முதலமைச்சராவார் என நம்பிக்கையுடன் தெரிவித்ததாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

தவெகவினர் அதிருப்தி

இந்தக் கருத்துகள் விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சிலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக, “விஜய்யை உருவாக்கியதில் எனக்கு முக்கிய பங்கு உள்ளது” என்ற தொனியில் ரத்தன் பண்டிட் தொடர்ந்து பொதுவெளியில் பேசியது இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட காரணமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. விஜய்யுடனான அரசியல் ரீதியான நெருக்கம் குறைந்திருந்தாலும், தனிப்பட்ட முறையில் ரத்தன் பண்டிட் மீது விஜய் தொடர்ந்து மரியாதையும் அன்பும் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது

விஜய்யின் அரசியல் பயணத்தின் ஆரம்பத்தில் அவருடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்பட்ட ரத்தன் பண்டிட், தற்போது பொதுவெளியில் தவெக கட்சி குறித்தோ முதல்வர் விஜய் குறித்தோ பேசுவதை தவிர்த்துவருவதை பார்க்கமுடிகிறது.