கலைஞர் நூற்றாண்டு விழாவில் ரஜினி கலந்து கொள்ளவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் அந்த ஏக்கம் தீர்ந்துவிட்டது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எ.வ வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் புத்தகத்தின் முதல் பிரதியை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “கலைஞர் நூற்றாண்டு விழாவில் ரஜினி கலந்து கொள்ளவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் அந்த ஏக்கம் தீர்ந்துவிட்டது.

கலைஞர் எனக்கு தந்தை மட்டுமல்ல. தாயும் தான். எனக்கு மட்டுமல்ல; லட்சோபலட்சம் பேருக்கு தந்தையாகவும் தாயாகவும் இருந்தவர் கலைஞர்.

கலைஞருக்கு எ.வ.வேலு எப்படியோ அப்படித்தான் எனக்கும். அதாவது வாயை திறந்து சொல்லாமலே கண் அசைவை பார்த்தே செய்து முடிப்பவர் எ.வ.வேலு என்று கலைஞர் சொல்வார். அப்படித்தான் அவர் எனக்கும்” என பேசினார்.