முதலமைச்சர் விஜய்யின் முதன்மைச் செயலாளர் நியமனம்.! யார் இந்த செந்தில் குமார்.?

3 weeks ago 4
ARTICLE AD

முதலமைச்சராக பதவியேற்ற விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் திமுக ஆட்சி அதிகாரத்தை இழந்த நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து இன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். அப்போது மூன்று முக்கிய கோப்புகளில் விஜய் கையொப்பமிட்டார்.200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம்,மாவட்டந்தோறும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் பாதுகாப்பிற்கான சிங்கப் பெண்கள் சிறப்பு படை என்ற அறிவிப்பினை வெளியிட்டார். இதனையடுத்து போலீசாரின் பாதுகாப்பு படை கான்வாய் அணிவகுப்போடு விஜய் தலைமைசெயலகம் வந்தார். அப்போது விஜய்க்கு அரசு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதலமைச்சரின் தனிச்செயலாளர் நியமனம்

இதனையடுத்து சட்டசபை செயலாளர் சீனிவாசன் முதலமைச்சர் விஜய்யிடம் கோப்புகளில் கையெழுத்து வாங்கினார். இதனிடையே முதலமைச்சர் விஜய்க்கு முதன்மை செயலாளராக செந்தில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.  1995-ஆம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் (IAS) அதிகாரி ஆவார். சுகாதாரத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை போன்ற முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வரும் செந்தில் குமார் முதலமைச்சர் விஜய்யின் முதன்மைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த செந்தில் குமார்.?

கொரோனா பாதிப்பின் போது பல்வேறு நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் சிக்கி தவித்த தமிழ்நாட்டை சேர்ந்த மக்களை மீட்க பெரும் முயற்சி எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல லஷ்மி பிரியா முதலமைச்சரின் இரண்டாவது தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read Entire Article