தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக திகழ்வது ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

நேர மாற்றம்:

ஜீ தமிழில் திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல் வீரா. இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வந்த வீரா சீரியல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியலின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் இன்று முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் முக்கியமான சீரியலில் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இதுவரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சந்தியா ராகம் சீரியல் இன்று முதல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

ஒரு மணி நேர கார்த்திகை தீபம்:

ஜீ தமிழில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று கார்த்திகை தீபம். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் இனிமேல் தினசரி ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாக உள்ளது.

மற்றொரு பிரபலமான இதன் காரணமாக இதுவரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த வாகை சூடவா சீரியல் இனி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டப்பிங் சீரியல்கள்:

இது மட்டுமின்றி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டப்பிங் சீரியல்களுக்கு என்று தனி வரவேற்பு உள்ளது. 3:30 மணிக்கு வசுதா என்ற பெயரிலும், 4:30 மணிக்கு என்ன சொல்லப் போகிறாய் என்ற பெயரில் இரண்டு புதிய டப்பிங் சீரியல்களும் ஒளிபரப்பாக உள்ளது.

பிரபலமான சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளுக்கு போட்டியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் வரவேற்பு இருந்து வரும சூழலில், இந்த சீரியல்களின் நேர மாற்றத்துடன் புதிய டப்பிங் சீரியல்களுக்கும் வரவேற்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.