சூப்பர் டீலக்ஸ் படத்தைத் தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் , ரம்யா கிருஷ்ணன் , வமிகா கப்பி, சமந்தா ஆகியோர் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 7 மணிக்கு வெளியிட இருக்கிறார்கள்.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஆரண்யகாண்டம் படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார் தியாகராஜன் குமாரராஜா. இப்படம் வெளியானபோது பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் பின்னர் ரசிகர்களால் கல்ட் சினிமாவாக கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 8 ஆண்டுகளுக்குப் பின் தனது இரண்டாவது படமான சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கினார். மிஸ்கின் , நலன் குமாரசாமி , நீலன் , தியாகராஜன் குமாரராஜா ஆகிய நால்வர் இணைந்து இந்த படத்தின் நான்கு கதைகளை எழுதினர். இப்படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரமும் விஜய் சேதுபதியின் நடிப்பும் அனைவராலும் பாராட்டுக்களை குவித்தது.

மீண்டும் இணையும் கூட்டணி

தற்போது மீண்டும் 7 ஆண்டுகளுக்குப் பின் தனது மூன்றாவது படத்தை தயாரித்து இயக்கவிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. விஜய் சேதுபதி இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் , சமந்தா , ரம்யா கிருஷ்ணன் , வமிகா கப்பி ஆகியோர் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருக்கிறார்கள். இந்த முறை இந்த கூட்டணி என்ன புதுவிதமான கதையோடு வரப்போகிறது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி நடித்து வரும் படங்கள்

விஜய் சேதுபதி நடித்த மெளனப் படம் காந்தி டாக்ஸ் திரைப்படம் அண்மை திரையரங்குகளில் வெளியானது. மிஸ்கின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ட்ரெயின் திரைப்படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. தெலுங்கில் புரி ஜகன்நாத் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஸ்லம்டாக் திரைப்படமும் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.