விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடுமையான கோடைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்குச் சீரான மற்றும் தங்குதடையற்ற மின்சாரம் வழங்குவது குறித்து, தமிழ்நாடு மின் பகிர்மான கழக அலுவலர்களுடனான சிறப்புக் கலந்தாய்வு மற்றும் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

மின் பகிர்மான கழகம் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் மின் விநியோகம் தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தற்போது உள்ள கோடைகாலத்தில் சீரான மின்சாரம் தங்குதடையின்றி விநியோகம் செய்வது குறித்தும் விரிவாக துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் மின் சாதனப்பொருட்கள் குறித்தும், மின் மாற்றிகள் எண்ணிக்கைகள் குறித்தும் மற்றும் இருப்பு உள்ள மின் சாதனங்கள் குறித்தும் விரிவாக கேட்டறியப்பட்டது.

மின் தடை சம்மந்தமாக புகார்கள் தெரிவிக்க...

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் மின் தடை சம்மந்தமாக வரப்பெற்ற புகார்கள் எண்ணிக்கைகள் குறித்தும் அதன் விவரங்கள் குறித்தும் விரிவாக கேட்டறியப்பட்டு புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மீதும் கேட்டறியப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மின் தடை சம்மந்தமாக புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண் 9498390744 என்ற எண்ணையும், 9445855768 என்ற வாட்சப் செயலி எண்ணிலும், 1800 425 5419 மற்றும் 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

திண்டிவனம் கோட்டம் செயற்பொறியாளர் 9445855835, உதவி செயற்பொறியாளர்கள் திண்டிவனம் நகரம் 9445855836, முருக்கேரி 9445855843, திண்டிவனம் மேற்கு 9445855850, செண்டூர் 9445855856 என்ற எண்களிலும்,செஞ்சி கோட்டம் செயற்பொறியாளர் 9445855784, உதவி செயற்பொறியாளர்கள் செஞ்சி நகரம் -9445855785, சத்தியமங்கலம் 9445855786, சிட்டாம்பூண்டி 9445855788, தாயனூர் - 9445855787 என்ற எண்களிலும்,

விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் பொறியாளர்களின் தொடர்பு எண்கள் விவரம்

விழுப்புரம் கோட்டம் செயற்பொறியாளர் 9445855738, உதவி செயற்பொறியாளர்கள் விழுப்புரம் நகரம் 9445855750, விழுப்புரம் (ஊரக பகுதி) 9445855756, மதுரப்பாக்கம் 9445855745, விக்கிரவாண்டி 9445855739, கஞ்சனூர் 9445855762 என்ற எண்களிலும்,கண்டமங்கலம் கோட்டம் செயற்பொறியாளர் 9445855769, வளவனூர் 9445857163, உதவி செயற்பொறியாளர்கள் கண்டமங்கலம் 9445857159, திருச்சிற்றம்பலம் 9445857165 என்ற எண்களிலும்,

மாநில அளவிலான மின்னகம் உதவி மையம் (சென்னை):

சென்னை தலைமையகத்தில் மாநில அளவிலான மின்னகம் என்ற உதவி மையத்தில் செயல்படும் 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மின் தடை, புதிய மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம், குறைந்த மின்னழுத்தம், பழுதடைந்த மின் கம்மங்கள், மின் கம்பி அறுந்து விழுதல் மற்றும் மின் கட்டணம் உள்ளிட்டவைகள் குறித்து தகவல் தெரிவித்து பயன்பெறலாம்.

திருவெண்ணெய்நல்லூர் கோட்டம் செயற்பொறியாளர் 9445855722 உதவி செயற்பொறியாளர்கள் திருவெண்ணெய்நல்லூர் 9445855900, அரசூர் 9445855799, அரகண்டநல்லூர் 9445855867 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தங்கள் பகுதியில் மின்சாரம் சம்மந்தமான புகார்களை தெரிவித்து பயன்பெறலாம்.

ஆட்சியரின் அறிவுறுத்தல்:

கோடைக் காலத்தில் பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றிப் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் அனைத்து நிலை அலுவலர்களும் தங்களுக்குள் ஒருங்கிணைந்து, அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.