மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிங்க! கடைசி தேதி: 24.6.2025! மிஸ் பண்ணிடாதீங்க!

5 months ago 5
ARTICLE AD

தஞ்சாவூர்: மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு... இந்த வாய்ப்பை மிஸ் செய்திடாதீங்க. தகுதியானவர்கள் காலதாமதமின்றி உடனே விண்ணப்பிச்சிடுங்க. நாட்கள் குறைவாக இருக்குங்க. என்ன வேலை வாய்ப்பு தெரியுங்களா? இன்னும் 3 நாட்களே இருக்கு. இன்னைக்கே உங்க விண்ணப்பத்தை பதிவு செய்திடுங்க.

சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு தகுதியான மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Secretariat Assistant (JSA),  காலியிடம்: 1 (PWD), சம்பளம்: மாதம் ரூ. 29,200 92,300, தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (Electronics Technician),  காலியிடம்: 1 (PWD) சம்பளம்: மாதம் ரூ. 29,200 - 92,300,  தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல் பிரிவில் டிப்ளமோ அல்லது பிஇ, பி.டெக் படிப்புடன் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (Graphic Assistant),  காலியிடம்: 1 (PWD), சம்பளம்: மாதம் ரூ. 29,200 - 92,300, வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். தகுதி: Fine Arts & Commercial Arts, Graphics & Visual Design பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் டிப்ளமோ, பட்டப்படிப்பை முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு சலுகை: உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nittrc.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பம் செய்து ஜூலை 9 ஆம் தேதிக்குள் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இயக்குநர், தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 600 113, தமிழ்நாடு, இந்தியா. (The Director, National Institute of Technical Teachers Training and Research, Taramani, Chennai - 600 113, Tamil Nadu, India.) ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: வரும் 24.6.2025.

Read Entire Article