டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷுப்மான் கில் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதற்கு இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் விளக்கமளித்துள்ளார்.

உலகக்கோப்பை அணி அறிவிப்பு:

இந்தியாவில் டி20 உலகக்கோப்பை அடுத்தாண்டு நடைப்பெற உள்ள நிலையில் இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது, இந்த அணியில் தற்போது துணைக்கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். டி 20 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் கில்லை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.

கில் ஏன் நீக்கம்?

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "ஷுப்மான் கில் மோசமான ஃபார்ம் காரணமாக நீக்கப்படவில்லை. அது அணியின் ஒருங்கிணைப்பு காரணமாகும். நாங்கள் டாப் ஆர்டரில் ஒரு விக்கெட் கீப்பரை விரும்பினோம். இது ஃபார்மைப் பற்றியது அல்ல. அவரது திறமையில் எந்த சந்தேகமும் இல்லை; அவர் ஒரு சிறந்த வீரர். அணிக்கு ரிங்கு சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தரும் தேவைப்பட்டனர்" என்றார்.

மேலும் "அணிக்குள் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுவர, பல விருப்பங்களைத் திறந்து வைத்திருப்பது முக்கியம். அதனால்தான் நாங்கள் இந்த அணியைத் தேர்ந்தெடுத்துள்ளோம். கில்லின் திறன் குறித்து எந்த சந்தேகமும் இல்லை" என்று சூர்யகுமார் கூறினார்.

அஜித் அகர்கர் சொன்னது என்ன?

கில் நீக்கப்பட்டது குறித்து விளக்கமளித்த தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் "தொடர்ச்சி (Continuity) இதில் முக்கிய பங்கு வகித்தது. ஷுப்மன் துணை கேப்டனாக இருந்தார், தற்போது அவர் அணியில் இல்லாததால் அந்த இடத்தை யாராவது நிரப்ப வேண்டியிருந்தது. இதற்கு முன்பு, தனது டெஸ்ட் போட்டி கமிட்மென்ட் காரணமாக அவர் டி20 போட்டிகளில் விளையாடவில்லை, அப்போது அக்சர் படேல் துணை கேப்டனாகப் பொறுப்பேற்றார். புதிய மாற்றங்களை அறிவிப்பதை விட, அணியின் நிலைத்தன்மையைத் தொடர வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது." என்றார்

இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் ( கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்ஷர் படேல்( துணை கேப்டன்). ரிங்கு சிங், பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன் ( விக்கெட் கீப்பர்)

டி20 உலகக்கோப்பைக்கான இதே அணிதான் ஜனவரி மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் ஆடுகிறது.