அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே... உங்களுடைய ராசிக்கு மார்கழி மாதம் ஒரு அதிர்ஷ்டகரமான மாதம் என்று சொல்ல வேண்டும்... காரணம் கிருஷ்ண பகவான் பிறந்தது ரோகிணி நட்சத்திரத்தில் அது ரிஷப ராசியில் உள்ளது... கிருஷ்ணர் தன்னை பற்றி கூறும் பொழுது மாதத்தில் நான் மார்கழி என்று கூறுகிறார்... அப்படியானால் கிருஷ்ணருக்கு மிகவும் உகந்த மாதமாக மார்கழி பார்க்கப்படுகிறது அவர் பிறந்தது ரிஷப ராசியில் உள்ள ரோகிணி நட்சத்திரத்தில் எனவே... உங்களுடைய எண்ணங்கள் ஈடறக்கூடிய மாதமாக இந்த மார்கழி அமைந்திருக்கிறது குறிப்பாக விரையாதிபதி என்று சொல்லக்கூடிய பன்னிரண்டாம் வீட்டு அதிபதி செவ்வாய் பகவான் அஷ்டமஸ்தானத்தில் மறைந்து விரயங்களை உங்களை விட்டு மறைய செய்கிறார்...

பெருத்த கடன் தொல்லை கஷ்டங்களால் கவலைப்படுபவர்கள் கூட தற்பொழுது அப்பாடா கடன்கள் அடைந்தது அல்லது கடன் கொடுத்தவர்கள் நம்மை தொந்தரவு செய்யவில்லை என்பது போன்ற நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்... பத்தாம் இடத்தில் இருக்கக்கூடிய ராகு தொழில் ரீதியாக உங்களுக்கு மிகப்பெரிய உதவியை செய்யப் போகிறார்... இரண்டாம் இடத்தில் குரு பகவான் அமர்ந்து எதிர்பாராத தனயோகத்தை உங்களுக்கு கொண்டு வரலாம்....

இவை எல்லாவற்றுக்கும் மேலாக சனி பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்.... சனி பகவான் கொடுக்கின்ற விஷயத்தை மற்ற எந்த கிரகத்தாலும் தடுக்க முடியாது என்பார்கள் அல்லவா... அதுபோல லாபஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்து அவர் தற்பொழுது உங்களுக்கு.. பாக்கியஸ்தானத்தின் ஒன்பதாம் வீட்டு பலன்களை உங்களுக்கு கொடுக்கப் போகிறார்... அதே போல தொழில் ஸ்தானமான பத்தாம் பாவகத்தின் பலன்களையும் 11 ஆம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு கொடுக்கப் போகிறார்...

இரு ஆதிபத்தியம் கொண்ட சனி பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து உங்களுடைய மனதிற்கும் குடும்பத்தாருக்கும் நன்மையை செய்யப் போகிறார்.... நான்காம் இடத்தில் சுகஸ்தானத்தில் கேது அமர்ந்திருப்பதால்... சற்று உடல்ரீதியான தொந்தரவுகளை சந்திக்க நேரிடலாம்.. காரணம் நீங்கள் சௌகரியமாக ஒரு இடத்தில் அமர்வதற்கு நான்காம் இடம் தான் காரணம் அந்த இடத்தில் கேது பகவான் அமர்ந்து அதிகப்படியான வேலை அலைச்சல் காரணமாக நிம்மதியாக ஓரிடத்தில் அமர முடியாத சூழல் ஏற்படலாம்...

இந்த காலகட்டங்களில் விநாயகரின் வழிபாடு உங்களுக்கு சற்று ஆறுலை கொண்டு வரும்... ஏழாம் வீட்டில் கிட்டத்தட்ட 3 கிரகங்கள் அமர்ந்திருக்கின்றன அதில் சூரிய பகவான் எட்டாம் வீட்டில் உங்களுடைய எதிர்பாராத அதிர்ஷ்ட வீட்டிற்கு சென்று விடுவார்... நான்காம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டிற்கு செல்வதால் வெளியூர் வெளிநாடு போன்ற காரியங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றமும் ஏற்றமான பலன்களும் கிடைக்கும்...

தூர தேசத்து பிரயாணம், அல்லது இன்பச் சுற்றுலா போன்ற காரியங்களில் நீங்கள் ஈடுபடலாம்... புதன் சுக்கிரன் ஏழாம் இடத்தில் அமர்ந்து வாழ்க்கைத் துணை மூலமாக நல்ல லாபம் கிடைக்கும்... நீண்ட வருடங்களுக்கு பிறகு வாழ்க்கைத் துணை உடன் மனம் விட்டு பேசுவீர்கள்... வேலை அலைச்சல் என்று இருக்கும் உங்களுக்கு வாழ்க்கை துணை சற்று ஆறுதலாக இருப்பார்... அதேபோல வியாபாரம் நிமித்தமாகவோ அல்லது தொழில் ரீதியாகவோ நீங்கள் இடம் மாற நேரிடலாம்... அந்த காலகட்டங்களில் ஆன்மீக வழிபாடு உங்களுக்கு மன நிறைவை கொண்டு வரும்... யாரிடமும் கோபப்பட்டு பேச வேண்டாம்... எரிச்சல் அடையக் கூடிய வகையில் ஏதேனும் உங்களுக்கு நடக்குமாரின் அமைதியாக செல்வது நல்லது.... வாகனம் பழுதாகுவது அல்லது உடலில் ஏதேனும் சின்ன வலி ஏற்படுவது போன்ற காரியங்கள் நடந்தாலும் கூட பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.... விநாயகர் கோவிலுக்கு சென்று நெய்திபம் போட்டு வாருங்கள் நன்மையே நடக்கும்....