போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது

4 hours ago 1
ARTICLE AD

போலியான வாட்ஸ் அப் குழு

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் மனோகரன் ( வயது 58 ) என்பவரை HSBC செக்யூரிட்டீஸ் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் செக்யூரிட்டீஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து போலியான வாட்ஸ் அப் குழுக்களில் , பாதிக்கப்பட்ட நபரான மனோகரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

பின்னர் அதிக லாபம் ஈட்டித் தரும் பங்குச் சந்தை முதலீடுகளைப் பற்றி தவறாக கூறியதை உண்மை என நம்பி ஏமாந்து  அவர்கள் சொன்னபடி பல்வேறு வங்கி கணக்குகளுக்கு கடந்த  22.03.2025 முதல் 14.05.2025-ம் தேதி  வரை சுமார் ரூ.1,17,26,447 - யை செலுத்தியுள்ளார்.

பின்னர் அவர் முதலீடு செய்த பணத்தை எடுக்க முனைந்த போது அவர்கள் வெவ்வேறு காரணங்களை கூறி பணம் கேட்டு வற்புறுத்தவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மனோகரன், சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கடந்த 13.09.2025 அன்று புகார் கொடுத்தார்.

போலியான வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்ட பணம்

புகாரின் அடிப்படையில் , சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் உதவி ஆணையாளர் அவர்களால் வழக்குப் பதிவு செய்து, காவல் ஆய்வாளரால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மோசடி செய்யப்பட்ட நிதியில் ஒரு பெரிய தொகை , அதாவது 31 லட்சம் முதல் லேயர் வங்கிக் கணக்கிற்கு (first-layer mule account) அனுப்பப்பட்டுள்ளது என்பதும், அதிலிருந்து மேலும் ரூ. 2,00,045 பிரவீன் என்பவருக்குச் சொந்தமான இரண்டாம் லேயர் உள்ள சிட்டி யூனியன் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டது என்பதும் கண்டறியப்பட்டது.

வங்கிப் பரிவர்த்தனைத் தடயங்களை ஆய்வு செய்ததில், இந்த வங்கி கணக்கு உத்திரப்பிரதேசம், அரியானா, கர்நாடகா  மாநிலங்களில் நடந்த சைபர் குற்ற வழக்குகளிலும்  பயன்படுத்தப்பட்டிருப்பது NCRP மூலம் தெரிய வந்தது. மேலும் அந்த வங்கி கணக்கிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்கப்பட்டிருப்பதும், இது திட்டமிட்ட போலி வங்கிக் கணக்கு நடவடிக்கை (organised mule activity) என்பதும், இந்த வங்கி கணக்கு மூலம் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுமார் ரூ.23 லட்சமும் எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

குற்ற செயலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர் மற்றும் கல்லூரி மாணவர்

இதனைத் தொடர்ந்து , திருச்சி மாவட்டத்திற்குச் சென்று, போலி வங்கிக் கணக்குகளைச் சேகரித்தல், மோசடி நிதியை புழக்கத்தில் விடுதல் மற்றும் குற்றச் செயலில் பெறப்பட்ட பணத்தை கிரிப்டோகரன்சியாக (cryptocurrency) மாற்றுதல் ஆகிய குற்றத்தில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த ஜி.பிரவீன் ( வயது 20 ) , சித்திக் பாஷா ( வயது 26 ) , பினோஜ் கான் ( வயது 32 ) ஆகிய மூவரை திருச்சியில் வைத்து கைது செய்தனர். விசாரணையில் பிரவீன் கல்லூரி மாணவர் என்பதும் இவர் தனது வங்கிக் கணக்கை கமிஷனுக்காக சைபர் எதிரிகளுக்கு வழங்கியுள்ளார் என்பதும் சித்திக் பாஷா ஆட்டோ ஓட்டுநர் வேலை செய்த வருவதும் இவர் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்திற்காகப் பல போலி வங்கிக் கணக்குகளைச் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது.

பினோஜ்கான் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதும், இவர் மோசடிப் பணத்தை எடுத்து, அதை Binance செயலி மூலம் USDT கிரிப்டோகரன்சியாக மாற்றி மோசடி மூலம் பணம் சம்பாதித்து வந்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து குற்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட   3 செல்போன்கள் (சிம் கார்டுடன்), 1 லேப்டாப், 1 டேப் மற்றும்  வழக்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Read Entire Article