<p style="text-align: justify;"><strong>சென்னை:</strong> செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த ஓஎம்ஆர் சாலையில் பண்டித மேடு பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதிய விபத்தில் கௌரி, ஆனந்தை, விஜயா, லோகம்மாள், யசோதா ஆகிய ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து சம்பவ இடத்தில் தற்பொழுது மாமல்லபுரம் போலீசார் விபத்து குறித்த விசாரணையை நடத்தி வருகின்றனர்.</p>
<p style="text-align: justify;">மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>