மாமனார் பாலியல் தொல்லை.. கண்டுகொள்ளாத கணவர்.. தீக்குளித்த பெண்ணால் பரிதவிக்கும் பிள்ளைகள்

4 months ago 5
ARTICLE AD

ரஞ்சிதா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

ராமநாதபுரம் பெருநாழி வீரமாய்ச்சன்பட்டியை சேர்ந்த விவசாயியான முனீஸ்வரன் (38) என்பவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதா ( 32) என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரஞ்சிதாவிடம் வரதட்சணை கேட்டு கணவர் முனீஸ்வரன் - மாமனார்  அண்ணாத்துரை ( 60) ஆகியோர் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும், பாலியல் ரீதியாக மாமனார் அண்ணாத்துரை துன்புறுத்தியதாகவும் கூறி நேற்று மாலை 7 மணியளவில் வீட்டில் ரஞ்சிதா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். 70 சதவிகித தீக்காயங்களுடன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ரஞ்சிதா உயிரிழந்தார்.

வழக்குப் பதிவு

கணவர் முனீஸ்வரன் மற்றும் மாமனார் அண்ணாதுரை ஆகியோர் வரதட்சனை கேட்டும், பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாகவும் உயிரிழந்த பெண் ரஞ்சிதா வாக்குமூலம் அளித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் பெருநாழி காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், போலீசார் பாலியல் துன்புறுத்தல் வழக்காக இதை ஏற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ரஞ்சிதாவின் குடும்பத்தையே சீரழித்துவிட்ட நிலையில், அவரது 10 வயது மகன் மருத்துவமனையில் கண்ணீர் மல்க நின்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சிதாவின் உடல் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ளது. உடலை பெற்றுக்கொள்ள மறுத்த உறவினர்கள், தாயின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமும் குடித்துவிட்டு தொல்லை

இறந்த பெண்ணின் ஏழு வயது மகன் கூறும்போது..,” அப்பா தினமும் குடிச்சிட்டு சண்டை போடுவார். அப்பா எப்ப பார்த்தாலும் குடிச்சிட்டு தான் இருப்பாரு. தாத்தா அம்மாகிட்ட தவறா நடந்தது பற்றி அம்மா அப்பா கிட்ட சொன்ன போதெல்லாம் சகஜம் அப்படினு அப்பா சொன்னாரு. இதனால அம்மா இறந்து போயிட்டாங்க" எனக்கூறினார்.

அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

இறந்த பெண்ணின் சகோதரி  கூறுகையில்..,” எங்க அக்கா வாக்கப்பட்ட நாளிலிருந்து எப்போதும் அழுது கொண்டே தான் இருப்பாள். நிம்மதியாக ஒரு நாள் கூட இருந்தது இல்லை. அவளது கணவர் குடிச்சிட்டு எப்போதும் அவளை துன்புறுத்திக் கொண்டே இருப்பார். அதை கொண்டு வா, இதை கொண்டு வா என்று.

அவளது மாமனார் சொல்வார். அவளை மட்டுமல்ல ஊரில் உள்ள எல்லா பெண்களிடமும் தவறாக தான் நடந்து கொள்ள முயற்சி செய்வார். இவளை நெடுநாளாக துன்புறுத்தி வந்துள்ளார். இதையெல்லாம் அவள் எங்களிடம் சொல்லவே இல்லை. சில நாட்களுக்கு முன்பாக தான் சொன்னாள். தலைமறைவாகியுள்ள அவரை கைது செய்ய வேண்டும், அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Read Entire Article